பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6

யைக் கைப்பற்றினார். அத்துடன் முக லாயப் பேரரசு இந்தியாவில் முடிவ

டைந்தது.

வணிகத்திற்காக நீண்ட .ெ ந டு ங் காலத்திற்கு முன்பிருந்தே அரபிகள் மேலைக் கடல் வழியாக இந்தியா வோடு, குறிப்பாகத் தென்னகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த னர் என்பது நாம் அறிந்ததே. பெருமா னார் காலம் முதலே இஸ்லாமியச் செய்திகளைப் பரப்பும் பொருட்டு முஸ்லிம்கள் வந்தனர்.

இந்தியாவிலேயே முதன் முதலில் கட் டப்பட்ட பள்ளிவாசல் கேரள மாநிலத் தில் உள்ள கொடுங்கல்லூர் எனுமிடத் தில் இன்றும் உள்ளது. இது கட்டப் பட்ட ஆண்டு 8.25 ஆகும். எனினும் இப்பள்ளிவாசல் கட்டப்பட்ட ஆண்டு 642 என்று கூறுவாறும் உண்டு. தென்ன கத்தில் சமுதாய வாழ்வில் மட்டுமல் லாது ஆட்சித்துறையிலும் முஸ்லிம்கள் பேரங்கம் வகித்தனர். மொழி, இலக் கிய, கலை வளர்ச்சியிலும் பெரும் பங்கு கொண்டனர். மெய்ஞ்ஞான வளர்ச்சிக் கும் பெருந்துணை புரிந்துள்ளனர். துண்டுபட்டுக் கிடந்த இந்தியப் பகுதி களை ஒருங்கிணைத்த பெருமை முஸ் லிம் ஆட்சியாளரையே சேரும்.

உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ் லிம்கள் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாவது ஆகும். முதலாவது நாடு இந்தோனேசியாவாகும்

1947ஆம் ஆண்டு இந்தியா ஆங்கி லேயே ஆட்சியினரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் வாழ்ந்த பகுதிகள் பாகிஸ் தான் எனும் தனி நாடாகப் பிரிந்தது. இன்றைய இந்தியாவின் 84 கோடி மக் களில் சுமார் 15 கோடிப்பேர் முஸ்லிம் கள். இந்துக்களுக்கு அடுத்தபடி அதிக எண்ணிக்கையினர் முஸ்லிம்கள் ஆவர்.

இந்தோனேசியா

ஆசியாவின் தென்பகுதியில் அமைந் துள்ள தீபகற்ப நாடான இந்தியா உலகிலேயே மக்கள் தொகை மிகுந் துள்ள இரண்டாவது பெரிய நாடாகும். உலகின் ஏழாவது பெரிய நாடாகும். இந்தியாவின் வடக்கே இமயமலைத் தொடரும், தெற்கே இந்தியப் பெருங் கடலும், கிழக்கே வங்காள விரிகுடா வும், மேற்கே அரபிக்கடலும் எல்லை களாக அமைந்துள்ளன.

வடக்குத் தெற்காக இந்தியாவின் நீளம் 3,214 கி.மீ. கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. இந்தியாவின் மொத்தப் பரப்பளவு 32,87,590 ச.கி.மீ. ஆகும். வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகளும் அர பிக்கடலில் உள்ள இலட்சத்தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.

முகலாயர்கள் காலத்தில் கட்டப் பட்ட தாஜ்மஹல், ஆக்ரா கோட்டை பத்ஹேப்பூர் சிக்ரியில் உள்ள அக்பர் அரண்மனை போன்றவை இந்தியக் கட் டிடக் கலைச் சிறப்புக்கு ஏற்ற சான்று களாகும்.

இந்தோனேசியா: உலகில் ஒரு சில நா டு க ள் தீவு த் தொகுதிகளைக் கொண்டவை.அவற்றுள் ஒன்று.இந்தோ னேசியா இந்நாடு 13,677 தீவுகளைக் கொண்டுள்ளது. இதில் பல தீவு களில் மனித நடமாட்டமே இல்லை. சில தீவுகளுக்குப் பெயர்கூட இல்லை. இந்நாடு ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா வுக்குமிடையே கி ழ க்கு மேற்காக அமைந்துள்ளது.

இத்தீவுகளில் மலைகள் பல அமைந் துள்ளன. அவற்றுள் ஒரு சில எரிமலை களாகும். சில அணைந்த எரிமலைகளா கும். காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கு நிறைய மழை பெய்கிறது. -