பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தார். இதன்பின் அரசு அதிகாரம் அனைத்தையும் தாமே மேற்கொண் டார். திறமையற்ற சுல்தானைப் பதவி விலக்கம் செய்தார். சுல்தான் துருக் கியை விட்டு வெளியேறினார். அதன் பின் கலிஃபாவான அப்துல் மஜீத் என்ப வர் மற்றவர்களின் துணையோடு குழப் பம் செய்ய முயன்றார். அவரையும் நாடு கடத்தினார். அத்துடன் கலீஃபா பதவியையும் இல்லாமல் ஆக்கினார்.

நாட்டின் முழு அதிகாரத்தையும் பெற்ற முஸ்தபா கமால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக துருக்கியையும் ஆக்க முனைந்தார். அதற்காகப் பல சீர்திருத்தங்களைச் செய்தார். அது வரை முஸ்லிம்கள் அணிந்து வந்த குஞ் சம் வைத்த துருக்கிக் குல்லாய்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர் அணியும் தொப் பிகளை அணிய வேண்டும் எனக் கட் டளையிட்டார். மீறியவர்களைக் கடு மையாகத் தண்டித்தார். பெண்கள் பர்தா அணிவதைத் தடை செய்தார்.

மார்க்க அமைப்புகளையெல்லாம் கலைத்து, அவற்றின் சொத்துகளை யெல்லாம் அரசுடைமையாக்கினார்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல் துருக்கி நாட்டின் சட்டங்களை மாற்றி யமைத்தார். தம் நாட்டை முழுக்க முழுக்க ஐரோப்பிய நாடுகளின் அடிப் படையில் உருவாக்கினார். அதற்கு முதற்படியாக துருக்கி மொழியை ஆங் கில வரிவடிவமான ரோமன் லிபியில் எழுதுமாறு கட்டாயப்படுத்தினார்.

இவர் ஏற்படுத்திய பல்வேறு சீர் திருத்தங்களால் துருக்கி நாடு வெகு விரைவிலேயே பலமான, நவீன நாடாக உருவெடுத்தது. பொருளா தார வலிமை ஏற்பட்டது. இத்தகைய மாபெரும் மறுமலர்ச்சிக்குக் காரண மான முஸ்தபா கமாலைப் பாராட்டும் வகையில் துருக்கிப் பாராளுமன்றம்

கருத்த ரர்வுத்தர்

இவருக்கு அத்தா துர்க் எனும் விரு தினை வழங்கியது. இதற்குத் துருக்கி யின் தந்தை' என்பது பொருளாகும்.

இவர் 1938ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் இஸ்தம்புலில் காலமானார். இவரது உடல் அங்காராவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கருத்த ராவுத்தர் (ஹாஜி) கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹாஜி கருத்த ராவுத்தர். உத்தம பாளையத்தில் 1888இல் பிறந்த இவரது இயற்பெயர் முஹம்மது மீரான் ராவுத்தர் என்பதா கும். இவர் தம் தமையனாரைவிடச் சற்றுக் கருப்பு நிறமாக இருந்ததனால் 'கருத்த ராவுத்தர் என அழைக்கப்பட் டார். நாளடைவில் இப்பெயரே அவ ருக்கு நிலைத்துவிட்டது.

விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், இளமையில் மூன்றாம் வகுப்பு வரையே படித்தார். பின்னர் திண்டுக் கல் சென்று மார்க்கத்துறையில் கல்வி பயின்றார். திறம்பட வேளாண்மைத் தொழில் செய்து பெரும் பொருள் தேடினார். இவர் பெற்ற மார்க்க ஞானம், கல்வி வளர்ச்சிக்கு உதவத் தூண்டியது. அதன் விளைவாக உத்தம பாளையத்தில் 1912இல் ஆரம்பப் பாடசாலை ஒன்றைத் துவங்கி, இளம் சிறார்கள் முறையான கல்வி பெற வழி வகுத்தார்.

இரண்டாண்டுகள் கழித்து உத்தம பாளையத்தில் பள்ளியொன்றையும் அதனை ஒட்டி மதரசா ஒன்றையும் நிறுவினார். இதன் மூலம் இஸ்லாமியச் சிறுவர்கள் மார்க்கக் கல்விபெற வாய்ப் பேற்பட்டது. அவ்வூரில் தாய் சேய் தல விடுதி ஒன்றையும் உருவாக்கித் தந் தார். அக்காலத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஜமால் முஹம்மது

முஸ்லிம்