பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இளைஞர் தொலைக்காட்சி தின்ற கண்ணன்வாய்போல் உலகனேத்தையும் உண்டு உமிழும் ಸ್ಥಿ அமைந்துள்ளது. அங் ங்னமே, தொலைக்காட்சி கிலேயத்திலுள்ள நமது கண்ணேவிட மிகவும் சிறியதாகவுள்ள ஒளி-மின் சாரக்கலம் என்னும் மாயக்கண் இதை எல்லையற்ற அகிலம் முழுவதையும் ஊடுருவிப் பார்க்க வல்ல தாக அமைந்துள்ளது. வானவெளியில் கோடானுகோடி சூரியர் களில் 5மது சூரியனும் ஒன்று. அத்தனே சூரியர் களிலும் நமது சூரியன் தரத்திலும் அளவிலும் மிகச் சிறியது. இந்தச் சிறிய சூரியனைச் சுற்றி யோடும் கிரகங்களுள் மிகச் சிறியது நாம் வதியும் பூமி, இந்த உலகம். அதன் பரப்பில் மிகச் சிறிய இனத்தைச் சேர்ந்த மானுடர்கள் காம்; பிணி மூப்புச் சாக்காடுடையவர்கள். இத்தகைய மக்க ளாகிய காம் நிறுவிய சிறியதொரு வீட்டினுள் அமைந்த சின்னஞ் சிறிய கருவி ஒன்று உல. கனத்தையும் செவிசாய்த்துக் கேட்கின்றது. மற்ருென்ருே உலகம் முழுவதையும் ஏறிட்டுப் பார்க்கின்றது. உலகனைத்திலுமுள்ள கலைகளே ஒன்ருகத் திரட்டி, எப்பகுதிகளிலும் சுரக்கும் அறிவினை ஒன்ருகச் சேர்த்து, ஞானப்பாலாக ஊட்டும் தாயர்களாக அமைகின்றன. இக் கருவி கள். தேசிய ஒருமைப்பாட்டிற்காகக் கோடானு கோடி பணத்தைச் செலவிட்டுத் தம்பட்டமடித்து