பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஒளி மின்சாரமாதல் வானெலியைப்பற்றிப் படித்தபொழுது ஒலி யலேகள் மின்சாரமாக மாற்றப்பெற்றன என்றும், அந்த மின்சாரம் திரும்பவும் ஒலியலைகளாகின்றன என்றும் அறிந்தோமல்லவா ? அங்ங்னமே ஒலி யலைகள் மின்சாரமாகவும், அந்த மின்சாரம் மீண்டும் ஒளியாகவும் எங்ங்ணம் மாற்றப்பெறுகின் றன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இத் தத்துவம்தான் தொலைக்காட்சி யில் பங்கு பெறுகின்றது. மின்சாரத்தை வெப்பமாகவும், ஒளியாகவும் மாற்ற முடியும் என்பதை அறிவியலறிஞர்கள் எளிதாக அறிந்தனர். ஆனால், ஒளியை மின்சார மாக மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஒளி எவ்வாறு மின்சாரமாகின்றது ? இவ்விடத்தில் ஒரு நிகழ்ச்சியை நினைவு கொள்வோம். வீட்டுப் பூங்காவில் அல்லது பெரிய அலுவலக வாசலில் உள்ள பூங்கா ஒன்றில் இரப்பர்க் குழாயைக் கொண்டு நீர் பாய்ச்சும் தோட்டக்காரன் ஒருவன் சாலேயி லி ரு ங் து வீடுவரையிலுமுள்ள நடை பாதையில் நீர் பாய்ச்சுகின்ருன் என்று வைத்துக் கொள்வோம். இரப்பர்க்குழலிலிருந்து தொடர்ந்து வரும் ர்ே ஒழுக்கினேக்கொண்டு நடைபாதையில் குவித்து வைக்கப்பெற்றுள்ள மிகச் சிறிய