பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இளைஞர் தொலைக்காட்சி வில்லையை நோக்கியுள்ள பக்கம் இலட்சக் கணக் கான மிகச் சிறிய ஒளியுண்ர்வுள்ள வெள்ளியா லான ஆடிகளால் (Mirror) போர்த்தப்பெற் றுள்ளது. இந்த வெள்ளி ஆடிகள் தனித்தனியாக இருப்பதுடன் சீசியம் (Caesium) என்ற உலோகத் தாலும் பூசப்பெற்றுள்ளன. இது கண்ணுடித்தட்டுத் திரை (Mosaic) என வழங்கப் பெறுகின்றது. இதிலுள்ள ஒவ்வோர் ஆடியும் ஒர் ஒளி-மின் கலமாகும். இவை மிகவும் ஒளியுணர்வுடையவை. காமிராவின் வில்லை. காமிராக் குழலின் உட்புறமுள்ள தட்டின்மீது ஒரு பிம்பத்தை உண்டாக்குகின்றது. ஒளி தட்டின்மீது படுங்கால் ஒவ்வோர் ஆடியினின்றும் மின்னணுக்கள் விடு விக்கப்பெறுகின்றன. ஆகவே, சிசியம் என்பது முன் இயலில் குறிப்பிடப்பட்ட நடைபாதையி லுள்ள சிறிய நுண்ணிய கற்குவியலைப் போன்றது; அதனைத் தாக்கும் ஒளியின் தாரை (Stream of light) இரப்பர்க்குழலினின்றும் வெளிப்படும் நீரொழுக்கினைப் போன்றது. ஒளி உறைப்பாக இருக்கும்பொழுது அதிகமான மின்னணுக்கள் கண்ணுடித் தட்டுத் திரையினின்றும் வெளியேறு கின்றன; ஒளி குறையும்பொழுது குறைவான மின் னனுக்கள் அதினின்றும் விடுவிக்கப்பெறுகின் றன. படத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரேமாதிரி யான பிரகாசத்துடன் இருப்பதில்லையல்லவா?