பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவியமுது பெறும் முறை 85 மேற்கூறிய அதிர்வுகள் காற்றுப் போன்ற ஏதாவது ஒர் ஊடகத்தின் (Medium) மூலம் பிரயா ணம் செய்யாவிட்டால் அவை நம்முடைய செவி களே அடைய முடியா. அதிரும் பொருளைச் சூழ்ந் துள்ள காற்றில் ஒருவிதக் குழப்பம்-சலனம்உண்டாகின்றது. ஓர் இரப்பர்ப் பட்டையை இழுத்து வைத்துக்கொண்டு அதை மீட்டில்ை, என்ன நேரிடுகின்றது என்பதை நாம் அறிவோம். இரப்பர்ப்பட்டை வெளிநோக்கி அதிரும்பொழுது, அதன் அருகிலுள்ள காற்றுத் துகள்கள் வெளி கோக்கித் தள்ளப்பெறுகின்றன. இதல்ை காற்றுத் துகள்கள் (Air particles) நெருங்கி நிற்கின் றன. இதனைச் சுருங்கிச் செறிதல் (Condensation) என்று வழங்குவர் அறிவியலார். இரப்பர்ப்பட்டை உள்நோக்கி அதிரும்பொழுது காற்றுத் துகள்கள் தாம் விட்ட இடத்தைத் திரும்பவும் தள்ளிக் கொண்டு வருகின்றன. இதனே விரிந்து அருகுதல் (Rarefaction) என்று அவர்கள் குறிப்பிடுவர். ஒவ்வோர் அதிர்வின்பொழுதும் இச்செயல் திரும் பத் திரும்ப நடைபெறுகின்றது. இதனால் அலைகள் உண்டாகி வெளிநோக்கி விரிந்து பரவுகின்றன. ஒரு குளத்தில் ஒரு கல்லே வீழ்த்தும்பொழுது இவ்வாறு அலைகள் உண்டாகிப் பரவுகின்றன அல்லவா? இங்ஙனம் விடிைக்கு 30 அதிர்வுகள் வீதம் உண்டாகும் ஒலிகளையும் கேட்கின்ருேம்: