64
இளைஞர் வானொலி
தோன்றியபடியெல்லாம் பலகையை உதைத்தால் ஊஞ்சல் வேகமாக ஆடாது; அதனுடைய ஆட்ட வேகம் குறையினும் குறையலாம். ஊஞ்சலின், ஆட்டத்திற்கு ஏற்ப, ஒழுங்காக, உந்தி உந்தி, உதைத்தால் ஒவ்வோர் உதையிலும் ஊஞ்சலின் வேகம் அதிகரித்து வருவதைக் காணலாம்.
ஒரு சமயம் ஊஞ்சற் பாலம் ஒன்றில் அணிவகுத்த காலாட்படைகள் அணியணியாக ஒன்று போலக் காலடி எடுத்துவைத்து நடந்து கொண்டிருந்தன. அந்தப் பாலத்தின் அசைவு நேரமும் அவர்கள் ஒழுங்காகக் காலடி எடுத்து வைத்து வரும் நேரமும் ஒத்திருந்தது. பாலமும் சிறிது சிறிதாக ஆடத்தொடங்கி, மிகவும் வேகமாக ஆடியது; அது புயலில் அகப்பட்ட படகைப்போல் ஆடியது; படைவீரர்கள் அதன் மீது நிற்க முடியாதவர்களாய்க் கீழே விழுந்தனர்.
இங்ஙனம் பல எடுத்துக்காட்டுக்கள் தரலாம். இத்தகைய அற்புத குணம் வானொலியில் ஒரு முக்கியக் கூறாக இருந்து பெரிதும் பயன் படுகின்றது. வானொலி அலைகள் எல்லாத் திக்குகளிலும் பரவிச் செல்லுகின்றன. இவை நமது வீட்டிலுள்ள வான் கம்பியைத் தாக்குகின்றன. இந்தக் கம்பி, தான் பெறும் அலைகளின் அதிர்ச்சிக்கு ஒத்தவாறு அதிரும்படி அமைந்திருந்தால், அதில் ‘ஒத்த நிகழ்ச்சி’ என்னும் செயல் தோன்