பக்கம்:ஈச்சம்பாய்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

159



ரோஜாக்கள் கீழே விழுந்து, மாலை பொக்கை வாயைக் காட்டியது. ஈரப்பட்ட குழிகளாகவும் தோன்றியது. கையாளான பெல்ட்காரரை, பல்லைக் கடித்துப் பார்த்தபடியே, மாப்பிள்ளையும், அவன் சித்தப்பாவும், அந்த மாலையைத் தூக்கி, பழனிச்சாமியின் கழுத்தில் திணித்தார்கள். இந்தமாதிரி வரவேற்பை முன்பு ஏற்றுக்கொள்ளாத அவர், இப்போது புனிதாவிற்காக பொறுத்துக் கொண்டார். இதற்குள் பூமாரி, பலகாரத் தட்டுக்களை ஏந்தி வந்தாள். மாப்பிள்ளையை மகளின் சார்பிலும், தாய்மையின் பூரிப்பிலும் அள்ளிப் பருகிக் கொண்டே, சமையல் கட்டிற்குள் மீண்டும் ஓடினாள். பழனிச்சாமி அவர்களை நன்றியோடு பார்த்துக் கேட்டார்.

'கல்யாணத்துக்கு நாள் பார்த்துட்டீங்களா? ஒரு டெலி போன் செய்துட்டு வந்திருக்கலாமே... பரவாயில்ல. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களுலதான் மனதார மகிழ்ச்சி ஏற்படும். எனக்கு இப்போ ஏற்பட்டிருப்பது, அந்த வகையான மகிழ்ச்சி. ஆனந்தக் கூத்து. கல்யாணத்த உங்க ஊர்ல வைத்தாலும், இங்கே வரவேற்பு வைக்கணும்.'

சித்தப்பாக்காரர், அண்ணன் மகனை ஒரு தினுசாகவும், பழனிச்சாமியை இன்னொரு தினுசாகவும் பார்த்துவிட்டு, விவரம் சொன்னார்.

'கல்யாணத்த தள்ளிப் போட்டுருக்கு. கவலைப் படாதீங்க. நிச்சயம் இவன்தான் மாப்பிள்ளை. ஒங்க மகள்தான் பொண்ணு. இப்பவே கல்யாணம் நடத்த முடியாம ஒரு இழவு விழுந்திட்டு. எங்க ராமனாதபுரத்துல் நடந்த சாதிக் கலவரத்துல, என் அண்ண ன -- இவனோட பெரியப்பாவ, அந்த சாதிப் பயலுக கொன்னுட்டானுக. பெண்பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/161&oldid=1371871" இலிருந்து மீள்விக்கப்பட்டது