பக்கம்:ஈச்சம்பாய்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஈச்சம்பாய்



டப்பாக்களை முன்பக்கமாய் கொண்டு வந்தாள். ஒரே சமயத்தில், அத்தனை பேரையும் முத்தமிட போவது போல் உதடுகளை குவியவைத்து மம்மித் தமிழில் அசத்தினாள்.

'ஹலோ' மைடியர் அண்டு நியர் ஒன்ஸ்... இது கேர்ல்ஸ் பேரைக் கொண்ட பெண் டப்பா.... அது பாய்ஸ் பேரைக் கொண்ட ஆண் படப்பா- இந்த ரெண்டு டப்பாக்களையும் இந்த எங் மேன் சூரியா... நெசமாவே நீ எங் தானடா... ஒகே. ஒகே. சூரியா குலுக்குவான். ரெண்டு டப்பாக்கள்லயும் வருகிற சீட்டுகள்படி ஜோடி சேர்ப்போம். ஓகேயா- இந்தச் ஜோடிங்க மகாபலிபுரத்துக்கு நாலு மணி நேரத்துல அதோ வரிசையா நிற்கிற மோட்டர் பைக்ல ஏறி.. கடற்கரைப் பக்கம் இருக்கிற பாலடஞ்ச கோயில் பக்கம் வரணும். ஓகேயா. அங்கோ பிரபல நடிகை கம்பாகிட்ட, கண்டதும் காதல் வசப்பட்ட ஜோடிங்க, தங்கோ பேர்களக் கொடுக்கணும். அவங்க குலுக்கல் முறையில ஒரு ஜோடியத் தேர்ந்தெடுப்பாங்கோ. ஆனா ஒண்ணுங்கோவழியில ஒருத்தருக்கொருத்தர் ஏடாகொடாமா நடக்கக் கூடாதுங்கோ. ஏன்னா நாம தமிளங்கோ. நம்மோட தமிள் நாட்டு கல்ச்சர கட்டிக் காக்கணுங்கோ . சூரியா!... வீரத் தமிள் மகனே! உன்னத்தான் சூரியா. குலுக்குடா.'

குமுதா துணுக்குற்றாள். இளங்கோவின் காதலியாக இருக்கும் அவளுக்கு, சிறிது மன உளைச்சல். அந்த உளைச்சலுக்குள் மனச்சாட்சி ஓணானாய் ஆடியது. ஆனாலும் அவள் கண்ட காட்சி அந்த ஓணானை ஒரே குத்தாய்க் குத்தியது.

சூரியா தன்னை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டே இரண்டு டப்பாக்களையும் குலுக்கி விட்டு, இரண்டு கைகளையும் அவற்றுள் துழாவ விட்டு இரண்டு துக்கடாப் பேப்பர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/34&oldid=1371995" இலிருந்து மீள்விக்கப்பட்டது