பக்கம்:ஈச்சம்பாய்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

65


 மீனாவுக்கு, அப்பவே அப்பாவைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனாலும், அந்த ஆட்டோவைப் போல், அந்த ஆசையையும் திருப்பி விட்டாள். நாளைக்கு ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டு, அப்பாவைப் பார்க்க வேண்டும். அவர் முகத்தில் ஏற்படும் ஆனந்த ஆச்சரியத்தை ரசித்துப் பார்க்க வேண்டும். தங்கை வேதாவுக்கு, அவள் இதுவரை போட்டறியாமல் ஏங்கும் நைட்டியை வாங்கிப் போகவேண்டும்.

தம்பிக்கு ஒரு நல்ல பேனா. அடிக்கடி பேனாவை தொலைக்கிறவன். இதைத் தொலைக்கிறது வாங்கிக் கொடுத்த அக்காவைத் தொலைக்கிறது மாதிரின்னு சொல்லணும். அய்யய்யோ .... அபசகுணமாய் பேசப்படாது. அவனுக்குத் தெரியாதா என்ன? கணவனோடு, புதுக்குடித்தன வீட்டுக்கு போனபோது கட்டிப்பிடிச்சு அழுதவனாச்சே.

இவர் மட்டும் என்னவாம்? 'டி' போட்டு பேசாதவர்..... சொல்லுக்கு சொல் அம்மாதான். இந்த வயசுலேயே அவ்வளவு நிதானம். அவரது ஆறடி உயரத்தில், படகுபோல் படர்ந்த மார்பில் சாய்வதே ஒரு தனிச் ககம். அந்த உருளைத் தேக்கு மார்பில், செடியாய் படர்வது, சுகத்துள்ளே ஒரு சுகம். நிஜமாவே நான் கொடுத்து வைத்தவள். பிசிராந்தையாரின் நவீன பெண் வடிவம்.

மீனா, தனது இலக்கிய நயத்தில், தன்னைத்தானே கண்டுபிடித்தபடி நடந்தாள். தானாய் சிரித்தபடி நடந்தாள், எதிரே பேருந்துகளும், ஆட்டோக்களும் மறைந்து, அப்பா, அவர்', அலுவலகம் என்று ஒவ்வொரு வாகனமும், ஒவ்வொருவரின் உருவமாய் தோன்றின. இதனால் சாவுக்கிராக்கி... சொல்லிக்கினு வந்துட்டியா போன்ற வசவுகளை காதில் வாங்காமலே வீட்டுப் பக்கம் வந்து விட்டாள், என்ன அதிசயம்? ஏழாவதா... எட்டாவதா...

ஈ.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/67&oldid=1371965" இலிருந்து மீள்விக்கப்பட்டது