பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ஈரோடு மாவட்ட வரலாறு


ஆதாரமாக இக்கல்வெட்டு உள்ளதால் தமிழகத்தின் மிக முக்கியமான கல்வெட்டாக இரு கருதப்படுகிறது.

பர்கூர் ஈரெட்டிமலையில் "துறகையுள்ளாரு கல்" என்ற கல்வெட்டுப் பொறித்த சிறு கல் கிடைத்துள்ளது. சித்தோடு அருகில் வடபுறம் உள்ள பாறை ஒன்றில் 'குட்டுவன்சேய்' என்ற தொடர் வெட்டப்பட்டுள்ளது. கொடுமணல் அகழாய்வுப் பானை ஓடுகள் பலவற்றில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள்

தமிழ்பிராமியிலிருந்து தோன்றி 11ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் கன்னிவாடி, நீலம்பூர், பிரமியம், பொன்னிவாடி, மூலனூர், வள்ளியநச்சல் ஆகிய இடங்களில் கொங்குச் சோழரின் தொடக்க காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டை ஒட்டிய ஈரோடு மாவட்டத் தென்பகுதியிலேயே இவை கிடைக்கின்றன.

கன்னடக் கல்வெட்டுக்கள்

விசயநகர அரசர்கள் மற்றும் மைசூர் உடையார் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டுக்கள் எறகணஹள்ளி, ஈரோடு, சத்தியமங்கலம், விண்ணப்பள்ளி, தாராபுரம், நத்தக்காரையூர், விசயமங்கலம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

தமிழ்க் கல்வெட்டுக்கள்

பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழ்க் கல்வெட்டுக்களே. வடமொழிச் சொற்களும், வடமொழி ஒலிக்குரிய எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் கோயில்களில் பொறிக்கப் பெற்றிருக்கும். சில கல்வெட்டுக்களில் வடமொழிச் சுலோகங்கள் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் எழுத்துக்களுக்குப் புள்ளியில்லாமலும் குறில் நெடில் (எகர ஏகாரம் ஒகர ஓகாரம்) வேறுபாடு இல்லாமலும்