பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

1. ஈரோடு மாவட்டம்


தொல்பொருள் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழும் உடைய மாவட்டம்!

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்து மாநிலத் தலைநகர் சென்னைக்கு அடுத்து ஏற்றுமதியில் ரூபாய் 10ஆயிரம் கோடியைத் தாண்டி மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மாவட்டம்!

தமிழ்நாட்டில் எட்டாவது பெருநகரமாக எப்பொழுதும் சுறுசுறுப்பாக, இயங்கும் ஈரோட்டைத் தன் தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம்!

நீர் வளமும் நில வளமும் மக்கள் மனவளமும் கொண்டு வந்தாரை அரவணைத்து வாழவைக்கும் மாவட்டம்!

அரசு ஊழியர்களும் இதர அலுவலர்களும் தொழில் முனைவோரும் தொழிலில் பணிபுரிவோரும் வணிகர்களும் வாழ்வியல் வசதிகளால் மிகவும் விரும்பிப் போற்றும் மாவட்டம்!

சுமார் 85 ஆண்டுகள் தமிழக ஆட்சி, அரசியல், சமுதாய உணர்வு ஆகியவற்றின் தொட்டிலாக விளங்கும் மாவட்டம்!

ஈரோடு மாவட்டம்!

அக்காலத்தில் செல்வம் என்று கருதப்பட்ட கால்நடை மிகுதியாலும், பல்வேறு மணிக்கற்களால் உரோமானியரையும் கவர்ந்த செல்வப் பெருக்காலும், நீர் வளத்தாலும், நில வளத்தாலும் இரட்டரும் சுங்கரும் சேரரும் சோழரும் பாண்டியரும் போசளரும் விசயநகராரும் மதுரை நாயக்கர்களும் மைசூர் உடையாரும் ஐதரும் - திப்புவும் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் அதிகாரத்தின் கீழ் ஈரோடு மாவட்டப் பகுதியைக் கொண்டு வர விரும்பினர்.

தமிழகத்தைப் படைகொண்டு தாக்கிப் பணிய வைக்க வந்த அத்துணை அன்னியப் படைநாயகர்களும் புகுந்த மூன்று பெருவழிகளும்