பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஈரோடு மாவட்ட வரலாறு


உளுந்தூர்ப்பணம் வராகன்
குளிகைப்பணம் வீரராயன்பணம்
கோபாலிகை வெங்கட்ராயன் வராகன்
திருவையாற்று நாகரம் ராஜகோபாலிகை
சுல்தானி ஓட்டை
நாகரம்
பூதாகரம்
பகோடா

ஸ்ரீயக்கி பழஞ்சலாகை, இடைச்சலாகை, புதுச்சலாகை என்பன.

வரியை நாணயமாச் செலுத்துவோர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாணயம் மாறினாலும் 'அப்போது வழங்கும் நாணயம்' மூலம் வரியைச் செலுத்த வேண்டும். இதை "அன்றாடு வழங்கும் காசு" என்று கல்வெட்டு கூறும். சில பொற்காசுகளில், வெள்ளிக்காசுகளில் குறைகள் (வாசி) இருக்கும். எனவே வரி கொடுக்கும் போது 'வாசிபடா நற்காக' கொடுக்க வேண்டும்.

இலக்கியங்களில்

கொங்கு வேளாளர் திருமணங்களில் சும்பர் இயற்றியதாகக் கருதப்படும் மங்கல வாழ்த்தை மங்கலன் என்றும் குடிமகள் என்றும் அழைக்கப்பெறும் நாவிதர் மணமேடையில் பாடுவார். நீண்ட அந்த மங்கல வாழ்த்தில் திருமண மொய் வாங்கியதைக்கூறும் இடத்தில் காசுகளை மொய்யாக வாங்கும் போது தட்டாரை அழைத்து 'நோட்டம்' பார்க்குமாறு கூறுவார்கள். இந்நிகழ்ச்சி

"கண்ணாளர் தமைஅழைத்து பொன்நோட்டம் பாகும்என்றார்.
அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
பணமது பார்த்துக் குணமது கழித்து
கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயும்
ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு