பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

26. கனிம வளம்


நீரையும், பயிர்விளைச்சலையும் நிலம் தருதல் அன்றிப் பல்வேறு களிமச் செல்வங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. அவற்றை உலோகம், உலோகம் அல்லாதவை என இரு வகைகளாகப் பிரிப்பர்.

உலோகங்கள்
பொன்

உலோகங்கள் பல வகையாக இருப்பினும் அதிகப் பயன்பாட்டுக்கு உரியவைகளாகத் திகழ்வன தங்கமும் இரும்பும் செம்பும் ஆகும்.

ஈரோடு மாவட்டப் பகுதியில் தங்கம் மிகச் சிறிதளவு கிடைக்கிறது. காவிரிக்கும் அதன் துணையாறு ஒன்றுக்கும் 'பொன்னி' என்று பெயர் வழங்கியதற்கு அதன் மணலில் சிறிய அளவாவது பொன்துகள் இருப்பதே காரணம் ஆகும். 'பொன்படு குட்டம்" என்ற பெயரால் குட்டைகள் இம்மாவட்டத்தில் அழைக்கப்பட்டது அவற்றில் பொன் எடுத்ததால் தான். ஏழு மாற்றுடைய (தரம் குறைந்த) பொன் கிடைக்கின்ற காரணத்தால்தான் 'எழுமாத்தூர்' எனப் பெயர் வந்தது என்பர். கொங்கு நாட்டுப் பொன்னைக் கொண்டே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஆதித்தசோழன் சிதம்பரத்திற்குப் பொன்வேய்ந்தாள் என்று இலக்கியம் கூறுகிறது. பொன்+கல்+ஊர் "பொங்கலூர்" ஆயிற்று என்பர்.

கோபிசெட்டிபாளையம், பென்சிமலை, ஊதியூர், எக்காத்தூர் ஆகிய இடங்களில் சிறிதளவு பொன் கிடைத்தாலும் அவை வணிக நோக்கிற்குப் பயன்படுவதில்லை. பிற உலோகங்களைப் பச்சிலை சேர்த்து உலையில் ஊதிக் கொங்கணச்சித்தர் பொன் உருவாக்கிய காரணத்தால்தான் ஊதியூர் மலைக்குப் "பொன்னூதியூர்" என்று பெயர் வந்து என்பர்.

இரும்பு

பொன்னை விட மதிப்புக் குறைவானதாக இரும்பு இருந்தாலும் பயன்பாட்டில் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது. அதனால் இரும்பைக் 'கரும்பொன்' என்பர். "எகிப்திய பிரமிட்டுகளில் உள்ள இரும்புப்