பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

ஈரோடு மாவட்ட வரலாறு


2. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (TIIC - Tamilnadu Industrial Investment Corporation)

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கான தொழில் வளர்ச்சிக்காகச் சென்னையில் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக் கழகம் 1982இல் ஈரோட்டில் தன் கிளை அலுவலகத்தைத் தொடங்கியது. தொழில்களுக்குத் தேவையான கருவிகள் வாங்கக் கடன் உதவியை அளிக்கிறது. தேவையான மானியங்களையும் இக்கழகம் அளிக்கிறது. தொழில்முனைவோர் குறைந்த வட்டி விகிதத்தில் தவணை முறையில் கடனைச் செலுத்தலாம்.

3.தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழகத் தொழில் பூங்கா (SIPCOT State Industrial Promotion Corporation of Tamilnadu)

பெருந்துறை அருகில் 2800 ஏக்கர் பரப்பளவில் 2000 ஜூலை முதல் இப்பூங்கா இயங்கிவருகிறது. ஜவுளி தொடர்பான பல தொழில்கள், தோல், கெமிக்கல், இந்தியன் ஆயில் கம்பெனியின் துணைப் பொருட்கள். பாரிவேரின் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள். பி.வி.சி.பைப், இரும்பு உருக்காலை தொடர்பான பல தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவை அரசு மானியம் பெற்றவை.

4. உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா (High Tech Weaving Park)

ஈரோடு வட்டம், சித்தோட்டை அடுத்துள்ள பேரோடு கிராமத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஜவுளித்துறையின் உதவியுடன் 128 கோடி ரூபாய் செலவில் ஈரோடு உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா அமைக்கப்படுகிறது.

உலக ஜவுளிச் சந்தையில் இந்தியாவின் பங்கு 3 சதவீதம் தான். இதை அதிகப்படுத்தவும் இந்துறையில் சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் கடுமையான போட்டியைச் சமாளிக்கவும் ஜவுளித்தொழிலில் புதுமையும் நவீன உத்திகளும் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில்