பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஈரோடு மாவட்ட வரலாறு


ஈரோடு வளர்ச்சி மாவட்டம்

ஈரோடு வளர்ச்சி மாவட்டம், கோவை வளர்ச்சி மாவட்டம் என கோவை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதனால் ஈரோடு மாவட்டம் பல்வேறு தொழில் வளர்ச்சிகளைப் பெற்றது.

1946ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிர்க்கா வளர்ச்சித் திட்டத்தில் வெள்ளகோயிலும் காங்கயமும் 1.10.1952இல் தொடங்கி 31.9.1956இல் முடிக்கப்பட்ட கீழ்பவானி திட்ட வளர்ச்சிப் பணிகள் மூலம் கோபி, ஈரோடு, பவானி, தாராபுரம் ஆகிய வட்டங்களும் 1953ல் கொண்டு வரப்பட்ட வட்டார சமுதாய வளர்ச்சித் திட்டத்தாலும் 1956ல் கொண்டு வரப்பட்ட தேசிய விரிவாக்க செயல் திட்டத்தாலும் குண்டடம், கொழுமண்குழி, தாராபுரம் மூலனூர்ப் பகுதிகளும் பயன் பெற்றுப் பல்வேறு சிறு தொழில்கள் தொடங்க வாய்ப்பேற்பட்டது.

இந்தியக் கிராமக் கைத்தொழில் குழு கைக்குத்தலரிசி தயா ரக்கவும் வார்தா செக்கு அமைக்கவும் கைக்காகிதம் - அட்டை செய்யவும் தேனீ வளர்க்கவும் பயிற்சி அளித்தது.

தேசிய சிறு கைத்தொழில் குழு கொல்லர் பயிற்சி, லாட ஆணி செய்தல், தச்சுப்பயிற்சி, தோல் பொருள் செய்தல் பயிற்சி ஆகியவற்றை அளித்தது. இந்தியக் கைத்தொழில் குழு தையல் வேலை, பின்னல் வேலை. பூவேலை, செங்கல் தயாரித்தல், கயிறு திரித்தல், மரப் பொம்மை செய்தல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. இதனால் கிராமத்தொழிலாளர்களும் பெண்களும் பெரிதும் பயனடைந்தனர்.

கூட்டுறவு இயக்கங்கள்

அநேகமாக இன்று எல்லாவிதமான சிறு தொழில்களுக்கும் கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த வட்டிக்குத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தக்கடன் கொடுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் 70000 கைத்தறிகளும் 50000 விசைத்தறிகளும் உள்ளன. 197 கூட்டுறவு நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கங்கள் உள்ளன. சில பெரிய கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் தமிழ்