பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ஈரோடு மாவட்ட வரலாறு


போன்ற பல வணிகர் பெயர்களை ஈரோட்டு மாவட்டக் கல்வெட்டுகளில் காணுகின்றோம்.

டணாயக்கன் கோட்டை, காவேரிபுரம், சர்க்கார் பெரியபாளையம், குண்டடம் போன்ற பல ஊர்க் கோயில்கட்கு வணிகர்கள் தாங்கள் விற்கும் பொருள்களுக்கேற்ப மகமை வரி கொடுத்து வழிபாடும் விழாவும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சர்க்கார் பெரிய பாளையம் வந்த வணிகக் குழுவினர் அவ்வூர்க் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றனர். அவர்கள் தங்கள் விற்பனையில்

மிளகு பொதி 1க்கு பணம் 1 மா
புடவைக்கட்டு 1க்கு பணம் 2 மா
நூல் பொதி 1க்கு பணம் ½ மா
பாக்கு பொதி 1க்கு பணம் * மா
பசும்பை 1க்கு பணம் ½ மா
கழுதைமேல் வரும் பண்டங்களுக்கு பணம் ½ மா
அளக்கும் சரக்குகளுக்கு பணம் ½ மா
தானியம் பணம் காணி
நிறுக்கும் பண்டங்களுக்கு பணம் 1 மா
யானை ஒன்றுக்கு பணம் 1 மா
குதிரை ஒன்றுக்கு பணம் ½ மா
சந்தனக்கட்டு 1க்கு பணம் ¼ மா
சே, கிடாக்களுக்கு பணம் 1 மா

குரக்குத்தளி ஆளுடையார் பூசைக்கு கொடையாக அளித்துள்ளனர்.

விற்கும் பொருள்கள் ‘ஏறுசாத்து', 'இறங்கு சாத்து' என இரு வகைப்படும். அவை முறையே வெளியூருக்குக் கொண்டு செல்லும் பொருள், வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைக் குறிக்கும்.

வணிகர்களும் கோயிலும்

வணிகர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களில் விற்பனையானவற்றுக்கே மகமை வரி கொடுத்துள்ளனர். இதை "சிலவான