பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ஈரோடு மாவட்ட வரலாறு


தொடங்க இரண்டு லட்சம் ரூபாயும் (1945ல்) இடமும் கொடுக்க முன்வந்தார். "காலேஜ் ஆஃப் டெக்னாலஜி" என்று பெயர் வைக்கப்பட்டது. ஜி.டி. நாயுடு பெயர் வைக்கப் பலரும் விரும்பினர், ஆனால் கல்லூரி தொடங்குவதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர்‘ஆர்தர் ஹோப்' என்பவர் பெயரால் 'ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக் னாலஜி" என்று பெயர் வைக்கப்பட்டது. மக்கள் "ஹோப் காலேஜ்" என்றே அழைத்தனர்.

1951ல் பி.எஸ்.ஜி நிறுவனம் பொறியியல் கல்லூரியைத் தொடங்கியது. 1956ல் சி.ஐ.டி தொடங்கப்பட்டது. 1961ஆம் ஆண்டு பவானி சாகரில் சேலம், கோயமுத்தூர் (ஈரோடு உட்பட) நீலகிரி மாவட்ட மாணவர்கட்காக வேளாண்மைப் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் எல்லாத்துறைக் கல்வியும் கற்பிக்கப் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன. பல பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொறியியற் கல்லூரிகள்

1) ஈரோடு செங்குந்தர் பொறியியற் கல்லூரி, துடுப்பதி
2) ஐ.ஆர்.டி.டி. (Institute of Road and Transport Technology) பொறியியற் கல்லூரி, சித்தோடு.
3) கொங்கு பொறியியற் கல்லூரி, பெருந்துறை.
4) சசூரி பொறியியற் கல்லூரி, விசயமங்கலம்.
5) எம்.பி. நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியற் கல்லூரி, சென்னிமலை.
6) நந்தா பொறியியற் கல்லூரி, பெருந்துறை.
7) பண்ணாரியம்மன் பொறியியற் கல்லூரி, சத்தியமங்கலம்.
8) வேளாளர் பொறியியற் கல்லூரி, திண்டல்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் 1) அம்மன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு

2) அய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பு. புளியம்பட்டி