பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

193


ஆகியவற்றிற்கு உரையும் எழுதியவர். காமஞ்சரி சிறந்த நாடகக் காப்பியம். இவர் படைப்பில் மிகச் சிறந்தது 'இராவணகாவியம்', தீரன் சின்னமலை வரலாற்றை முதன் முதலில் எழுதி வெளிட்டவர்.

கு. அருணாசலக்கவுண்டர் (1905-1999)

கோபி வட்டம் நன்செய்ப்புளியம்பட்டி ஊரினர். வாணவராயச் வரலாறு, பழைய கோட்டைப் பட்டக்காரர் நாட்டுப்பாடலும் பூர்வ பட்டயமும், தமிழ்நாடும் வீரசைவமும், மில்டனின் சுவர்க்க நீக்கம் (தமிழாக்கம்) போன்ற நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் தக்கை இராமாயணம் பதிப்பித்தார் (யுத்த காண்டம் தவிர). பாம்பண்ணகவுண்டன் குறவஞ்சி, நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் காதல் ஆகியவைகளை மறுபதிப்புச் செய்தார்.

காணிப் புலவர்கள்

சோழநாட்டிலிருந்து கொங்கு நாடு வந்த கம்பரை கொங்கு நாட்டவர்கள் வரவேற்றனர். ஈரோட்டுப்பகுதியில் கம்பருக்குப் பல்லக்குச் சுமந்தும் அவரது எச்சில் காளாஞ்சியை ஏந்தியும் அவர் பாதச் சம்மாளிகளை (செருப்புக்கள்) தலையில் தாங்கியும் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தும் பணி செய்ததாகப் பலர் கூறிக்கொள்கின்றனர். கம்பரது வாரிசுகளான காணிப்புலவர்களை கொங்கு மக்கள் மிக மதித்துப் போற்றினர் என்று பல ஆவணங்கள் கூறுகின்றன. அவர்கள் பாடிய பாடல்கள் பல.

வீராச்சிமங்கலம் கந்தசாமிக்கவிராயர், குங்காருபாளையம் முத்துசாமிப்புலவர், ஊதியூர் நாச்சிமுத்துப் புலவர், சிவகிரி நஞ்சையப் புலவர், பூந்துறை அம்பிகாபதி புலவர், கம்புளியம்பட்டி நாகப்ப கவுண்டர், நஞ்சை புளியம்பட்டி பி.ஜி.கருத்திருமன், பவானி வி.ஆர். குட்டியப்ப கவுண்டர், கள்ளிப்பட்டி க.கு. கோதண்டராம கவுண்டர், தி.ச.மு. மேகலை, கொடுமுடி கு. ராஜவேலு, ச.து.சு. யோகி, கோபி கு.ச. ஆனந்தன், ஈரோடு வேலா. இராசமாணிக்கம், அக்கிரகாரம் ரகீம், கவிஞர் வெ.நா. திருமூர்த்தி, சீனி. தேவராசன், ஈ.ப. சண்முக சுந்தரம்,