பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

ஈரோடு மாவட்ட வரலாறு


மாம்பாடி - எதிரனூர்
சத்திமங்கலம் - கஸ்பாபேட்டை
கொற்றனூர் - சங்கரண்டாம்பாளையம்

சில ஊர்கள் பேச்சு வழக்கில் திரிந்து வழங்குகின்றன.

பார்ப்பதி - பாப்பினி
கூவலூர் - கூகலூர்
பிரமதேயம் - பிரமியம்
கொல்லன் கூவல் - கொல்லங் கோயில்
உலகவிடங்கம் - ஓலகடம்
கொடுமணம் - கொடுமணல்
ஆதவூர் - ஆதியூர்
வெள்ளக்கல் - வெள்ளகோயில்
புகழ்மங்கலம் - பழமங்கலம்
வள்ளி எறிச்சில் - வள்ளியறச்சல்
குழாம்நிலை - கொளாநல்லி
கற்றான் காணி - கத்தாங்கண்ணி
நீலம் பேரூர் - நீலம்பூர்
பரன்சேர்பள்ளி - பரஞ்சேர்வழி
புன்றுறை - பூத்துறை
ஈர்ந்தூர் - ஈங்கூர்


ஈரோடு மாவட்டத்தில் கொங்குச் சோழர், பாண்டியர் நாளில் வேதம் வல்ல அந்தணர்கட்கு ஒரு வளமான ஊரை அடுத்தோ அல்லது புதியதாகவோ அங்கிரகாரங்கள் ஏற்படுத்தி, வாழ்க்கை வசதி செய்து தரப்பட்டன. அவற்றில் ஒன்று கூட இப்போது வழக்கில் இல்லை; அவ்விடத்தில் அந்தணர்களும் இல்லை. அரசன், அரசியர், அரசியல் தலைவர்கள் பெயரால் அவை அழைக்கப்பட்டன.

கத்தாங்கண்ணியில் - வீரசோழச் சதுர்வேத மங்கலம்
வைரம்பள்ளியில் - உத்தமசோழ சதுர்வேத மங்கலம்
ஈரோட்டில் - மூவேந்தசோழர் சதுர்வேத மங்கலம்
எழுநூத்தி மங்கலத்தில் - எல்லாம்வல்ல சோழச் சதுர்வேத மங்கலம்