பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

205


ஈரோடு மாவட்டப்புலவர்களான கொங்கு வேளிரும் திருத்தக்க தேவரும் இசை பற்றிய பல்வேறு செய்திகள் கூறுகின்றனர்.

பட்டாலிக் கல்வெட்டில் 'கூத்தன் யாழ்வல்லான் ஆன உதய சிங்க தேவன்' என்பவனும், கீரனூர்க் கல்வெட்டில் 'கீரனூர் முதலிகளில் யாழ்வல்லான் ஆன அட்டாலைச் சேவகன் அணுத்திரப் பல்லவரையன் என்பவனும் குறிக்கப்படுகின்றனர். இவர்களிருவகும் 12ஆம் நூற்றாண்டினர். மற்றொரு கலைஞர் 'நிருத்தப் பேரரையன் பட்டம் பெற்றுள்ளார்.

எழுமாத்தூர் பொய்ங்காக் கவுண்டர், மருதுறை செல்லப்ப கவுண்டர், கொற்றனூர் சரவணக் கவுண்டர் ஆகியோர் எழுதிய ஒரு ஒப்பந்தத்தில் சாட்சிக் கையொப்பமிட்டவர்களுள்
1) சுத்த சங்கீதம் ருத்திரவீணை நரசய்யன், சேலுவய்யன்.
2) நாகபாசத்தாசில் சிவக்கொழுந்து நட்டுவன், வேலுமணி நட்டுவன்
3) மத்தளம் வீரப்பன், காளி
4) சங்கீதம் முத்துக் கருப்பன், தானப்பன்
5) நாகசுரம் நல்லய்யன், பொன்னய்யன்
6) தவில் குப்பணன், நாராயணன்
ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். இந்த ஆவணம் கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

வெள்ளோடு சர்வலிங்கேசுவரர் கோயில் கல்வெட்டில் நன்மை. தீமைக்குப் 'பேரிகையுள்ளிட்ட வாத்தியம்' வாசிக்கக் காலிங்கராயன் கம்மாளர்கட்கு உரிமை கொடுக்கின்றான். அவர்களைத் தவிர ஏனையோர் அவ்வாத்தியங்களை வாசித்தமை தெரிகிறது.

ஈரோடு மாவட்டத்துக் குறவஞ்சி இலக்கியங்களில் எல்லாப் பாடல்களுக்கும் இசை குறிக்கப்பட்டுள்ளன, அவை பாடப்பட்டோ நடிக்கப்பட்டோ இருக்க வேண்டும்

கொங்கு வேளாளர்களில் கண்ணன், செல்லன், தேவேந்திரன், அந்துவன், தூரன் குலத்தார் உள்ளிட்ட பலர் வழிபாடு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு 'குலமாணிக்கி' என்ற பெயரில் தேவரடியார்களை