பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

211


வடமொழிக்கல்வி

ஈரோடு வட்டம் கிழாம்பாடியில் வாழ்ந்த பாம்பண்ண கவுண்டர் மீது பாலபாரதி முத்துசாமி குறவஞ்சி இலக்கியம் பாடியுள்ளார். ஒரு முறை புலவர் முத்துசாமி “பாம்பண்ண கவுண்டரின் பெயர் துஷ்ட ஜந்துவின் பெயராக இருக்கிறதே“ என்று அவர்தாய் முத்தாத்தாள் அவர்களிடம் கேட்டார். அருகில் இருந்த சேஷய்யர் என்பவரைக் காட்டி இவர் பெயர் சேஷன் என்றார். "அது ஆதிசேனாகிய பாம்பின் பெயர் அல்லவா? வடமொழியில் பெயர் வைத்தால் இனிக்கிறது. தமிழ்ப் பெயர் உங்களுக்கு கச்சிக்கிறதா" என்று கேட்டார் முத்தாத்தாள்.

ஈரோடு வட்டம் கங்காபுரம் பழனியப்பகவுண்டர் தமிழ்ப்புலவர். அவர் மனைவி பழனியம்மாள் தமிழ் மட்டுமல்ல வடமொழியும் அறிந்தவர். ஒருமுறை அவர்கள் தோட்டம் சென்று வரும்போது அவர்கள் வீட்டுத் திண்ணையில் 'பீமண்ணா' என்ற புலவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த பழனியம்மாள் அவரை அன்புடன் விசாரித்தார். "பீமண்ணா" மரியாதை இல்லாமல் ஆணவத்துடன் "யாம் சோடசாவதானி" பதினாறு கலைகளில் வல்லவர் (சோடசம் + அவதானி) என்று கூறினார். உடன் சற்றும் தாமதிக்காமல் "ஐயா! நீங்கள் இரண்டு ஆடு திருடிய கள்வரா?" (சோடு+அசம்+அவதானி) என்று கேட்டார். புலவர் மன்னிப்புக் கேட்டார்.

நியாயம் தீர்ப்பவர்

ஈரோடு வட்டம் பூந்துறையை அடுத்துள்ள மணியம்பாளையத்தில் கொங்கு வேளாளரில் காடைகுலச் செல்வ விநாயகக் கவுண்டர் என்பவர் மனைவியார் தெய்வானையம்மாள் வெள்ளோடு கனகபுரம் சாத்தந்தை குலப் பழனிவேலப்பகவுண்டர் மகள். தமிழ் இலக்கியம், இலக்கணம், காப்பியம், நீதி நூல்கள் கற்ற தெய்வானையம்மாள் பேரறிவும் மதி நுட்பமும் கொண்டு விளங்கினார். மக்களுக்கிடையே, சமூகங்களுக்கிடையே, ஊர்களுக்கிடையே ஏற்படும் சண்டை, சச்சரவு வழக்குகளை விசாரித்து நீதி கூறுவார். தோற்றவர்க்கு அபராதமும் வென்றவர்க்கு வெற்றிக் காணிக்கையும் விதிப்பார். பெருந்துறை மடத்துப்