பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

ஈரோடு மாவட்ட வரலாறு


கோயிலில் விளக்கு வைத்தல், திருப்பணி ஆகியவற்றில் பெண்களும் பலர் தம் பங்கைச் செலுத்தியுள்ளனர்.

‘சூறும்பிள்ளரில் காவலன் அரையன் மனைக்கிழந்தி
       நாயகவிச்சி'

'காவலன் வளவர் மனைக்கிழத்தி சோழாண்டி'

'ஆளவந்தானான வீரராசேந்திர அதியமான் மனைக்
       கிழத்தி சேறம்மை'

'சாத்தந்தை சிறியான் உடையான் மனைக்கிழத்தி
      தாவன் தாவி'

'பெரியகோட்டையில் புத்தூருடையான் புள்ளகங்கன்
      மனைக்கிழத்தி நீலம்பேரூர் கூடல்கிழான்
      மகள் வடுகங் கோதை'

என்பவர்கள் அவர்களுள் சிலர், 'மனைக்கிழத்தி' என்ற பெயர் சிறப்புடையதாகும். தேவரடியார்களும் கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர்.

தேவரடியார் சடைமேலிருந்தாள்

'தேவரடியாரில் சாத்திபெற்றியான திருவிளக்குப் பிச்சி'
'தேவரடியாரில் அம்மையாண்டாள் ஆன சாத்தன் சீதேவி'
என்பவர்கள் அவர்களுள் சிலர்.