பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

223


அமைக்கத் திட்டமிடுமாறு 7.9.1931 அன்றும் 28.9.49 அன்றும் ஆணையிடப்பட்டன. (P.W. - Railway Go.Nc 2263; 3644) பின் இத்திட்டப்பணிகள் அளவிடுதல் மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்டன. இப்போது இப்பாதைகளுள் சில சிறிது மாற்றத்தோடு அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோடு - பழனி இரயில் பாதையும் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சத்திரங்கள்

ஈரோடு மாவட்டத்தில் முன்பு வழிப்போக்கர், வணிகர்கள் தங்கும் சத்திரங்கள் பல இருந்தன. அவை இரு வகைகளாக இயங்கின. சில உணவு வசதியுடன் இருந்தன. மற்றும் சில தங்குவதற்கு மட்டும் பயன்பட்டன.

சத்திரங்கள் (தேவைப்பட்டால் உணவு வசதி)

அந்தியூர் கோபிசெட்டிபாளையம் பெருந்துறை
ஊத்துக்குளி கொடுமுடி வெள்ளகோயில்
காங்கயம் திம்பம்
சத்தியமங்கலம் பவானி

சத்திரங்கள் (தங்குவதற்கு மட்டும்)

அத்தாணி ஊதியூர் தாளவாடி மலையம்பாளையம்
கண்ணபுரம் குண்டடம் திம்பம் நம்பியூர்
காங்கயம் சத்தியமங்கலம் தலைமலை நெருஞ்சிப்பேட்டை
கொத்தமங்கலம் சிவமலை பண்ணாரி மூலலூர்
விசயமங்கலம் ஹாசனூர் ஈரோடு

ஊதியூரிலும் மூலனூரிலும் பங்களாக்கள் என இவைகளை அழைத்தனர். வட்டக்கழகம், மாவட்டக்கழகப் பொறுப்பில் இவை இருந்தன. பெரும்பாலும் இவை வணிக வழியிலேயே இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் பொதுப்பயன்பாட்டிற்கெனச் சாவடிகள் இருந்தன. பல்வேறு வசதிகளுடன் தங்கும் வாடகை விடுதிகள் ஏற்பட்டதும் சத்திரங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்தது. காங்கயம்