பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

231


“பூத்துறை நாட்டோம்", "வடபரிசார நாட்டோம்" என்று நாட்டுச் சபையார் கூறிக்கொண்டு நிர்வாகம் செய்ததை இம்மாவட்டக் கல்வெட்டுக்கள் பலவற்றில் காணலாம். இதன் சீரும் சிறப்பும் கருதி எந்த அரசர்களும் தங்கள் ஆட்சியில் 'அந்த நாடாட்சி முறைக்கு' இடையூறு எதுவும் செய்யவில்லை.

நாடெங்கும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் சமூக நீதியையும் நிலைநாட்ட கொங்கு நாடெங்கும் கண்காணிக்க உருவான நான்கு பட்டக்காரர்களும் இம்மாவட்டத்திலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொங்குப் பட்டக்காரர்கள்

கொங்கு வேளாளர் தலைவர்கள் 'பட்டக்காரர்கள்' என அழைக்கப் பெறுவர். பொள்ளாச்சி, உடுமலை வட்டத்தில் உள்ளவர்கள் பாளையக்காரக்கள், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளோர் 'மிட்டாதாரர்கள்'

காடையூர் காங்கேய மன்றாடியார்

இவர்கள் பொருளந்தை குலத்தில் 'முழுக்காது' பிரிவைச் சேர்ந்தவர்கள், வாக்களிக்கப்பட்ட உரிமையைத் தர மறுத்து சகோதரர்களிடம் இஸ்லாமிய சர்தார் உதவியோடு அவற்றைப் பெற்றாள் பொருளந்தை குலத்து இளைஞன் காங்கேயனை மணந்த சேடகுலப் பெண் வெள்ளையம்மாள். வெள்ளையம்மாள் வழி வந்தவர்கள் முழுக்காது பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் "கொங்கு 24 நாட்டுக்கும் நற்குடி 48000 பசுங்குடி 12000 ஆகியோருக்கும் ஆலகோல 69 ஜாதிக்கும் பன்பறை 18 ஜாதிக்கும் மதாசார விசாரணை கர்த்தா" என்று ஒரு ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ளனர்.

காங்கயம் புதூர்ப் பல்லவராயர்

இவர்கள் கொங்கு வேளாளரில் செங்கண்ண குலம் சார்ந்தவர்கள், இவர்கள் முன்னோன் 'லிங்கண்ணன்' காங்கயம் பெருங்குடிருல வேல் கவுண்டர் மகள் வெள்ளைப் பிள்ளையை மணந்து காங்கயத்தில் காணி பெற்றார். சோழன் வேண்டிக் கொள்ள பல்லவனை வென்றதால் இம்-