பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

ஈரோடு மாவட்ட வரலாறு


கருணீகர்

பெரும்பாலும் கணக்கர்களாகப் பணிபுரிந்த இவர்கள் சோழிய வேளாளர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைப்பட்டம் இவர்களுக்கு உண்டு, ஆலயத் திருப்பணிகளும் வேளாளரோடு இணைந்து செய்துள்ளனர்,

உப்பிலியர்

கற்பூரச் செட்டியார் என அழைக்கப்படும் இவர்கள் உப்புக் காய்ச்சம் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பூத்துறையில் இவர்கள் சமூகக்கூட்டம் கூட காடைகுல அழைப்பிச்சாக்கவுண்டர் நியாய மேடை அமைத்துக் கொடுத்துள்ளார்.

நாயக்கர்

விசயநகரார், மதுரை நாயக்கர் காலத்தில் படைவீரர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் விளங்கியவர்கள். இவர்கள் பெயரில் பல பாளையப்பட்டுக்களும் ஊர்களும் உள்ளன.

ரெட்டியார்

உழவுத்தொழிலை மேற்கொண்டவர்கள், மாவட்ட வளர்ச்சிக்குப் பாடுபட்ட இவர்கள் சமூக இதழுக்கு 'ஏர்முனை' என்றே பெயர்.

இன்னும் ஒட்டர், பறையர், குறவர், மாதாரி, தோட்டி போன்ற பல சமூகத்தினர் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பிற மாநில மக்களும் உள்ளனர்.