பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஈரோடு மாவட்ட வரலாறு


“ஆச் எயில் அலைத்த கல்கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர்”

என்று சங்க இலக்கியம் கூறுகிறது. சங்ககாலக் கொங்கர் பலருடன் போரிட்டுள்ளனர்.

சேரரும் சோழரும் பாண்டியரும், கோசரும், மிஞிலி, அதிகன், அஃதை போன்றவர்களும் கொங்கரோடு போர் செய்துள்ளனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன் ‘ஆகெழு கொங்கர்’ நாடகப் படுத்தியதாகப் பதிற்றுப் பத்துக் கூறுகிறது. ‘கொங்கரை ஓட்டி’ நாடுபல தந்ததாகப் பசும்பூண் பாண்டின் அகநானூற்றில் புகழப் படுகிறான். கொற்றச் சோழர் கொங்கரைப் பணிய வைத்ததாக அகநானூறு குறிக்கிறது. கோசருக்காக மிஞிலி, அஃதை, அதியன் ஆகியோர் கொங்கு வாகையில் (விசயமங்கலம்) போர் செய்துள்ளனர். ஆய் அண்டிரன் கொங்கரைக் குடகடல் ஓட்டியதாகப் புறநானூறு கூறுகிறது.