பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

14. விசயநகர அரசுக் காலம்


(கி.பி.1364 - 1642)


டில்லி முகமதியர்கள் தெற்கே வந்ததால் துவாரசமுத்திரம் போசளர் அரசு மறைந்தது. முகமதியர்கள் தெற்கே பொருள் ஆசையால் வந்தார்களேயன்றி ஆட்சிபுரிய வரவில்லை.

போசளரிடம் ‘சங்கமன்' என்ற யாதவ குலத்தினன் குறுநிலத் தலைவனாக விளங்கினான். அவனுக்கு நான்கு ஆண் மக்கள் இருந்தனர். அவர்களில் ஹக்க, புக்க என்ற இருவர் துங்கபத்திரை நதிக்கரையும் வேட்டையாடச் சென்ற போது வித்யாரண்யர் என்ற முனிவர் பழைய கிஷ்கித்தை இருந்த இடமாகிய பம்பா நதிக்கரையில் இந்து அரசு தோற்றுவித்து நாட்டைக் காக்குமாறு கூறினார். 1336ஆம் ஆண்டு அங்கு அவர்களால் அரசு நிறுவப்பட்டது. 'வித்யாரண்யபுரம்‘ என்பது விஜயநகர் என வெற்றித் திருநகர் ஆயிற்று. ஹக்க - ஹரிஹரன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். புக்க - புக்கண உடையார் ஆனார்.

வீர விசைய புக்கண உடையார் (1364-1377) முதல் ஆட்சியாண்டுக் கல்வெட்டு காங்கயம் வட்டம் வள்ளிஎறிச்சலில் காணப்படுகிறது. புக்கண உடையார் காலத்தில் அவருடைய மற்றொரு சகோதரன் வீர கம்பண உடையார் மதுரை வரை படையெடுத்து வந்து மதுரை சுல்தான்களை வென்றார்.

புக்கண உடையார் மகன் இரண்டாம் அரிகரன் கல்வெட்டு (1377-1404) தாராபுரத்தில் உள்ளது. 'பிரதான இராசதானி'யான தாராபுரம் உத்தம வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு "இராஜ்ய அபிஷேக விண்ணகரம் பெருமாள்" என்று பெயர். துலுக்க வாணத்தால் அக்கோயில் பள்ளி வாசலாக மாற்றப்பட்டிருந்தது. 1387இல் வீர அரியண உடையார் அக்கோயில் முழுவதையும் மீண்டும் பழையதை விட நன்றாகக் கட்டி, இறைபடிமங்களையும் எழுந்தருளுவித்து "பூர்வத்தில் இராசாக்கள் நாளில் உண்டாயிருந்த" கொடைகளை மீண்டும் அளித்தார்.

இரண்டாம் அரிகரன் பேரனும், முதலாம் தேவராய உடையார் (1406-1422) மகனுமான மூன்றாம் அரிகரன் இளவரசனாக "குமார