பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஈரோடு மாவட்ட வரலாறு

சண்டை செய்து அநேக ஜனங்களை இறக்கக் குடுத்து அவர்களையும் செயித்து உத்தரவாதம் பண்ணினதில் விசுவநாத நாயக்கர் அவர்களுக்குச் சந்தோஷம் வந்து எங்களுக்கு அனேகம் வெகுமதியும் செய்து சிறிது கிராமமும் பூமியும் விட்டுக் கொடுத்து உன் சேவகம் இருக்கட்டுமென்று உத்தரவு கொடுத்தார். மதுராபுரிக்கு வடமேற்குச் சிறுமலையும் அதில் சேர்ந்த நெல்வழிக் கிராமங்களும் விட்டுக் குடுத்து அதுக்கு நாமகரணம் அம்மையநாயக்கன்பாளையம் என்று பேருங்குடுத்து சிறுமலை அடிவாரத்தில் கோட்டை போட்டுக் குடுத்தார்" என்பது ஒரு ஆவனப் பகுதியாகும்.

இதே போல் ஊத்துக்குளி பாளையக்காரர் 51ஆம் கொத்தளத்தைக் காத்ததாகவும், தவசிமேடு சோத்தளநாயக்கர் 72ஆம் கொத்தளத்தைக் காத்ததாகவும் கூறிக்கொள்கின்றனர். புதிய-பழைய தலைவர்களின் பாளைய எல்லைக்குள் இல்லாத மற்ற பகுதிகள் மதுரை நாயக்கரின் நேரடி ஆட்சியில் இருந்தன.

விசுவநாத நாயக்கர் காலத்தில் நாயக்கருக்கு உள்படாமல் கலகம் விளைவித்த திருநெல்வேலி அஞ்சுராசாக்களை நாயக்கர் சார்பில் சென்று அடக்கி ஊத்துக்குளி தஞ்சையகாலிங்கராயர் "பராக்கிரம" பட்டம் பெற்றதாகக் கூறிக் கொள்கிறார்.

திருமலைநாயக்கர் காலத்தின் தளவாய் இராமப்பய்யன் இராமநாதபுரம் சடைக்கத்தேவனோடு போர் புரியப் போகும்போது ஈரோடு மாவட்டப் பகுதித் தலைவர்கள் பலர் நாயக்கர் படையுடன் சென்று போரிட்டு வெற்றிக்குத் துணை நின்றுள்ளனர். இராமப்பய்யன் அம்மானை "ஈரோடு தன்னில் எண்ணவொண்ணாக் கொங்கு மன்னர்" உதவியதாகக் கூறிச் சிலர் பெயர்களையும் கூறுகிறது. அவர்கள் அப்பாச்சிக்கவுண்டன், கணக்கதிகாரி கவுண்டன், கொப்பக்கவுண்டன், குறிக்கவுண்டன், மெய்க்கவுண்டன் ஆகியோர் ஆவர்.

நாயக்கர் காலத்தில் கொங்கு நாட்டில் பல கோட்டைகள் இருந்தன. ஈரோடு மாவட்டப் பகுதியில் தாராபுரம், விசயமங்கலம், டணாயக்கன்கோட்டை, ஈரோடு, சத்தியமங்கலம், அந்தியூர்.