பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

83

மைசூர் ஆதிக்கத்தை ஒழிக்க நல்ல தருணம் என்று மகிழ்ந்த சொக்கநாதன் சீரங்கன் மீது அனுதாபம் கொண்டு தாராளமாக உதவி செய்ய வாக்களித்தான். பீஜப்பூர் சுல்தானின் செஞ்சி, தஞ்சைத் தலைவர்களும் மதுரை நாயக்கருக்கு உதவியாக வந்தனர். மதுரைக்கு உள்பட்ட ஈரோடு ஜாகீர்தார் அய்யப்ப நாயக்கனும் மதுரைக்கு உதவ வந்தான்.

நான்கு படைகளும் மைசூர் ஆதிக்கத்தை விரட்டும் நோக்கோடு விசயநகர மன்னன் சீரங்கனுக்கு உதவும்படையுடன் வந்தனர். ஒரு லட்சம் காலாட் படையினர், நூறு யானைகள், பல்லாயிரம் குதிரைப் படையினர் ஆகியோர் சொக்கநாதன் புடைத்தலைவன் லிங்கம நாயக்கர் தலைமையில் மைகுருக்கு உள்பட்டிருந்த ஈரோடு நோக்கிப் புறப்பட்டனர். தொட்ட தேவராயன் தன் அண்ணன் மகன் சிக்க தேவராயன் தலைமையில் ஈரோட்டுக்குப் படையை அனுப்பினான். 1667இல் ஈரோட்டில் நடைபெற்ற இப்போரில் மைசூர்ப் படை பெரும் வெற்றி பெற்றது.

தொட்ட தேவராயன் காலத்தில் ஈரோடு வட்டம் நசியனூர்க் கோயிலுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டது. தொட்டதேவராயன் இறந்தபின் சிக்கதேவராயன் மைசூர் அரசன் ஆனான். பெரும்படை திரட்டி சொக்கநாத நாயக்கர் தன் படைத்தலைவன் 'சங்கார கிருதி' என்று பட்டம் பெற்ற வெங்கட கிருஷ்ண நாயக்கன் தலைமையில் சிக்கதேவராயன் மீது போர் தொடுத்தார். இம்முறையும் மதுரைப்படை தோற்றது. மதுரைப் படையை முற்றிலும் அழித்த மைசூர்ப்படை ஏராளமான ஆயுதங்களையும் குதிரைகளையும் யானைகளையும் கைப்பற்றியது.

குன்னத்தூர், அந்தியூர்க் கோட்டைகளும் ஈரோடும் மைசூரார் வசம் ஆயின. சிக்கதேவராய உடையார் சத்தியமங்கலம் அருகேயுள்ள தவளகிரியில் குமாரசாமி கோயிலைக் கட்டியதாகத் தமிழில் தவளகிரி மிலும், சத்தியமங்கலத்தில் கன்னடத்திலும் உள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மதுரை வலுவிழந்ததால் மைசூர் உடையார்கள் ஈரோடு மாவட்டத்திலும் ஆலயப்பணிகளிலும் அறப்பணிகளிலும்