பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

89

வந்த ஐதரபாத் நிஜாம், ஆர்க்காடு நவாபு படைகளுக்கும் இடையில் 1767 முதல் 1799 வரை நடைபெற்ற நான்கு மைகுர்ப் போர்களிலும் ஈரோடு மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை அடைத்தது. ஈரோட்டில் மட்டும் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் வீடுகள் அழித்தன. மக்கள் பெரிதும் அல்லல்பட்டனர்.

கும்பினிப் படைகளும் ஐதர், திப்புவும் ஈரோட்டை மாறி மாறி முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே திண்டுக்கல் வரை பரவியிருந்த ஐதர், திப்புவின் ஆட்சி 4.5.1799இல் சீரங்கப்பட்டணம் போரில் திப்பு மரணம் அடைந்ததால் திப்பு வசம் இருந்து ஈரோடு மாவட்டம் கும்பினியார் வசம் ஆயிற்று.