உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைந்த நேரத்தில் யார் எதிராளியை அவுட் செய்கிறாரோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றது எனது அறிவிக்கவேண்டும். 21. ஆட்டம் முழுவதும் முடியாமல், இடையிலே நின்று போனால் என்ன சேய்வது? ஏதாவது ஒரு காரணத்தினால், ஆட்டம் நடைபெறாமல் நின்று போனால், அதே வேளையில் (session) அதே இடத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தால், ஆட்டத்தில் பங்கு பெற்ற அதே ஆட்டக்காரர்கள், ஆட்ட அதிகாரிகள், ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் எடுத்திருந்த அதே வெற்றி எண்கள் முதலியற்தை அப்படியே கணக்கில் வைத்துக் கொண்டு, ஆடச் செய்து முடிக்கவேண்டும். அதே வேளையில் (பொழுதில்) ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், புதிதாகவே ஆட்டத்தைத் தொடர வேண்டும். அதே ஆட்ட அதிகாரிகள் அந்த ஆடடத்திற்கு இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. 22. கோகோ ஆட்டத்திற்கு எத்தனை அதிகாரிகள் உண்டு? 1. நடுவர்; 2. துணை நடுவர்கள்; 1 நேரக் கணக்கர்; 1 வெற்றி எண் கணக்கர். 23. கோகோ ஆட்டத்தி் அடிப்படைத் திறன்கள் யாவை? விரட்டுபவர்களுக்கு 1 உடனே எழுந்திருத்தல் 2. சரியாக‍க் கோ கொடுத்தல் 3. வட்டச் சுற்று முறை 4. சட்டென்று திரும்பி சரிந்து ஒதுங்கும் திறன். 24. கோகோ ஆட்டததில் மாற்றாட்டகாரரை எப்படி மாற்றுவது? விரட்டித் தொடும் குழு தனது மாற்றாட்டக்காரரை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் ஓட்டக் காரர்கள் குழு தமது ஓடும் வாய்ப்பைத் தொடங்குவதற்கு முன்னதாகவே மாற்றிக் கொள்ளலாம். ஓடும் வாய்ப்புக்கு இடையில் மாற்றிக் கொள்ள முடியாது, அனுமதியில்லை. 25. சரியான கோ கொடுக்கும் முறையை விளக்குக. ஓடி விரட்டுபவர் சதுரக் கட்டத்தில் உட்கார்ந் திருப்பவரிடம் கோ கொடுக்கிறபோது கோ என்று சத்தமாக அவரது முதுகுப் பகுதியை தொட்டுச் செல்லவேண்டும். அதே சமயத்தில் அவரது ஒரு காலானது, அந்த குறுக்குச் சந்தி் ஒரு பகுதியை தொட்டுக் கொண்டிருப்பதுபோல் இருந்து கோ கொடுத்தால். அதுவே சரியான கோ ஆகும்.