பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சமாதானத்துக்கு ஓர் அரங்கு


நைல் நதிக் கரையிலும் இஸ்ரேலையடுத்துள்ள பாலை நிலத்திலும் போர்மூண்டு கொஞ்ச காலத்துக்குள்ளாகவே நாம் ஐ. நா. தினத்தைக் கொண்டாடுவது விந்தையல்ல. ஆனால் அதில் ஆழ்ந்த கருத்து இருக்கிறது. ஐ. நாவுக்குப் பக்கபலமாக இருந்து அதற்கு உறுதியும் ஆதரவும் தேடுவதில் நாம் உறுதியாகயிருப்பதை இதுகாட்டுகிறது. ஏனென்றால் உன்னத லட்சியமுள்ள ஒரு நிறுவனத்தை அதன் தோல்விகளைக் கொண்டு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அந்த நிறுவனத்தின் அடிப்படை உணர்ச்சியைக் கொண்டும், அதன் மூலம் ஏற்படும் நம்பிக்கையைக் கொண்டும்தான் அதை அளவிட வேண்டும், ஐக்கிய அரபுக் குடியரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் ஐ. நா. வால் தடுக்க முடியவில்லை என்பதும், வியட்நாம் போரை மூடிவுக்குக் கொண்டு வர அதனால் இயலவில்லை என்பதும் உண்மையே! ஐ. நா. செயலற்றுவிட்டது என்று நிரூபிப்பதற்குச் சில சம்பவங்களை எடுத்துக்காட்ட முடியும். அத்தகைய சம்பவங்களைச் சிலர் எக்களிப்போடும் வேறு சிலர் வேதனையோடும் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள். ஆனால் எங்கேயாவது மோதலோ வலுத்தாக்குதலோ, துவேஷமோ இருந்தால் உலக மக்களெல்லோரும் ஐ. நா. வையே நினைத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். இது ஓர் அற்புத உண்மை. ஏனென்றால், பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் இதயத்தில் நம்பிக்கை ஒளியை ஊட்டும் ஸ்தாபனமாக ஐ. நா. விளங்குவதை இதுகாட்டுகிறது. உலக மக்கள் ஐ. நா. ஸ்தாபனத்தைச் சமாதானத்துக்கும் நல்லுணர்வுக்குமான ஒரே சுருவியாகவும், போரையும் ஆக்கிரமிப்பையும் முடி-