பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


தித்திருக்கிறோம். அப்போது நான் வருத்தப்பட்டேன். நெறிகள் சரியில்லை என்பதால் அல்ல! இந்த நெறிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் வளர்ந்துகொள்ளவில்லையே என்பதுதான் அதற்குக் காரணம். அந்த நெறிகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே என்ற குறை இருப்பதால், அந்த நெறிகளை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்!"


வேலூரில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரர் ஓய்வு பெற்ற காலத்தில் தாயகம் செல்லவிருந்த பொழுது, வழியனுப்பு விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார்கள்; எவ்வளவோ மைல்களுக்கு அப்பாலேயிருந்து வந்து--வேற்று நாட்டுக்காரராக இருந்தாலும் விழுமிய தொண்டராக--பிறர் பயனடையும் மருத்துவ நிலையங்களையும் கல்விக்கூடங்களையும் அரண்மனைகளையும் கட்டித் தந்து பணிபுரிந்தவர்களாயிற்றே என்ற கருத்தில், அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த அந்தக் கிருத்தவரை வழியனுப்பச் சென்றேன்.

அப்போது வேலூரிலிருந்து இந்த மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. 'கிருத்துவரை வழியனுப்பும் விழாவிலே கலந்து கொள்ள வந்தால் நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவோம்!' என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது; எங்கள் கட்சிக் கொடியிலேயே கறுப்புத்தான் இருக்கிறது என்று அப்போது வேடிக்கையாகச் சொன்னேன்.

எவ்வளவோ--தூரத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்றாலும்--அயலவர்கள் என்றாலும்--அவர்கள் செய்த நல்ல காரியத்தைத் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்; அது போன்ற காரியங்கள் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்--ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும் ஏற்படுத்தி, ஈட்டிய