பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


இலங்கையைச் சார்ந்தவர் என்பதைவிட இலங்கையிலுள்ள தமிழன்பர் குடும்பத்தைச் சார்ந்தவர் எனலாம்.

தமிழர் என்று அவர்களை நான் சொல்வதுகூட அவர்கள் நாட்டு அரசியலில் அருவெறுப்பையும் அச்சத்தையும் உண்டாக்கிவிடுமோ? என்பதால் அப்படிக் கூறத் தயக்கப்பட்டேன்.

இலங்கை வெளிநாடு என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் இடையே இருப்பது இருபது மைல் தொலைவுதான்!

வாடைக் காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால்கூட அந்தக் காற்று இந்தப் பக்கம், இந்தக் காற்று அந்தப் பக்கம் என்ற நிலையில் இருப்பவர்கள் அப்படி அடிக்கிற அந்தக் காற்றும் நல்ல காற்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது கவலை.

சிலப்பதிகார நாடகக் காப்பியத்தை ஆக்கித்தந்த தம்பி கருணாநிதிக்கு மீண்டும் நமது நன்றி.