பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுத்தக்கார மனிதர்


க்தவத்சலனார் அவர்கள் இந்திய அரசியலிலும் குறிப்பாகத் தமிழக அரசியலிலும் தம்முடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். நாட்டில் 50 வருட வரலாற்றில் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவருடைய தனிப்பட்ட பண்பைப் பாராட்டுவதைவிட அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள நிலைமையைப் பாராட்டினால் அவரை நாம் உணர்ந்து இருக்கிறோம் என்று பொருள்.

அவரோடு ஒத்த கருத்துள்ளவர்கள் பாராட்டுவதை விட ஒத்துக் கொள்ளாதவர்கள் பாராட்டுவதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு ஆகும்.

அவர் ஒரு கட்சியை சேர்ந்தவர். நான் ஒரு கட்சியைச் சேர்ந்தவன். இருவரும் தனித்தனி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெரியார் காங்கிரசிலிருந்து பிரிந்தார். பெரியாரிடமிருந்து நாங்கள் பிரித்தோம். கரங்கிரசில் இருந்து பிரிந்த இயக்கம்தான் மற்ற இயக்கங்கள்; மூலத்தில் எல்லோரும் ஒன்றுதான்.

பழைய காலத்தை நினைவு படுத்தக்கூடிய பெரியவர்களில் ஒருவராக நம்மிடம் பக்தவத்சலம் இருக்கிறார் என்பது பெருமைக்குரியது ஆகும்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் என்று ராஜாஜி-பெரியார்--காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் மறைந்தால் பல விஷயங்கள் வெளியே வராமலே போய்விடும். இவர்கள் எல்லோருக்கும் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இருப்பது பாராட்டுக்குரியது ஆகும். இந்தப் பெரியவர் எல்லாம் இன்னும் பல ஆண்டுகள். நம்மிடத்திலே இருந்து பல நல்ல கருத்துக்-