பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


யாகக் கொண்டு நடத்துதலும் வேண்டும். நாம் வெவ்வேறு இலட்சியத்தில் சென்றாலும் ஒரு இலட்சியத்திற்கு வருபவர்கள்.

பெரியாரவர்களோடும் மற்றவர்களோடும் தம்முடைய லட்சியத்தை விட்டுக் கொடுக்காது பழகினாலும் தம்மைச் சந்தேகப்படுவதாக அடிகளார் குறிப்பிட்டார்கள். அதை அவர் குறிப்பிட்டபோது பெரியார் அவர்களுடன் அரித்துவாரத்திற்குச் சென்றது நினைவுக்கு வந்தது.

மாலை நேரங்களில் பெரியார் கங்கை நதி தீரத்தில் உலாவச் செல்வார். வெண்தாடிப் பளபளக்க மஞ்சள் நிற சால்வை போர்த்திக் கொண்டு பெரியார் முன்னே செல்வார். அவர் எனக்குக் கம்பளிக் கோட்டு வாங்கித் தராததால் குளிர் தாங்காமல் நான் கைகளை இறுக்கக் கட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே போவேன்.

இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பெரியார் அவர்களைப் பெரிய சாமியார் என்றும், என்னைச் சின்னச்சாமியார் என்றும் கருதிவிட்டார்கள். பெரிய சாமியாருக்கு இருக்கின்ற சக்தியில் சீடருக்குக் கொஞ்சமாவது இருக்காதா என்று கருதி என் காலிலும் பலர் விழுந்து கும்பிட்டார்கள்.

இங்கே நாங்கள் வேறுவிதமாகக் கருதப்பட்டாலும் அரித்துவாரத்திலிருந்தவர்கள் எங்களைச் சாமியார்களாகவே கருதி விட்டார்கள். அதேபோல் சிலர் சந்தேகப்படுவது இயல்பு.

நெடுந்தொலைவு போன மகன் திரும்பத் தந்தையைப் பார்க்க வரும்போது கையில் கிடைத்ததை வாங்கி வந்து தருவான். அதே போல் இன்று பெரியாரைப் பார்க்க வந்த