பக்கம்:உயிரில் கலந்தது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தம் தொடர்கதையில் குறித்த வாசகம் நினைவில் புரண்டு கொடுத்ததைச் சட்டை செய்யாமல், புரட்டி விட்டவாறு, தம் சட்டையை உதறிக் கொண்டே எழுந்து மீண்டும் குறிச்சியில் சாய்ந்து ஏப்பம் ஒன்றைத் துல்லியமாக வெளியேற்றினார்.

வாணியின் மோகம் மண்டிய விழிகளில் குளித்து நெஞ்சம் புகுந்து மீண்டும் திரும்ப விரும்பினர் ஞானசீலன், அவ்வாறே செய்யவும் செய்தபோது, அவருக்குக் கடல் முத்துப் போல சிந்தனைகள் சில கிடைத்தன. அவர் தமக்குத் தாமே முணு முணுத்துக் கொண்டார்.

“...கனவுகள், நெஞ்சத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன; ஆனால், திருமணங்களோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன:”

ஆசைகள், கனவுகளில் நிச்சயிக்கப்படுகிகின்றன: ஆனால், திருமணங்களோ மண்ணில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன!

கண்ணும் கண்ணும் பேச, வாணி ஞானசீலன் இருவரும் வாய்மூடி மெளனிகளாயினர். அந்த நாளிலே, மாமல்லரும் சிவகாமியும் கட்டுண்டிருந்ததாக கல்கி வர்ணித்தார். அல்லவா, அம்மாதிரியாக!...

கோசலை அம்மாள் வந்தாள். வந்து, வைகாசி முடிவில் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்றாள். வாணியின் தந்தை கோதண்டபாணியும் ‘உம்’ கொட்டினர்கள்.

வாணி புறப்பட்டாள்.

நெஞ்சில் இடம்பிடித்திருந்த நேரிழையாள் வாணி அவ்வளவு லகுவாகப் புறப்பட்டுப் போய்விட விடுவாரா, என்ன?...

ஞானசீலனைப் பார்க்க சரபோஜி மன்னர் கல்லூரித் தோழர்கள் வந்தார்கள். எல்லோரும் அந்திமாலையில் காப்பி சாப்பிட்டுவிட்டு மணிக்கூண்டில் சிமெண்ட் பெஞ்சியில்