பக்கம்:உரிமைப் பெண்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

17

 கொண்டு போனதில்லை. வள்ளியாத்தாள்தான் மேய்க்கக் கொண்டு போவது; தண்ணீர் காட்டுவது; கட்டுத்தறியில் கட்டுவது எல்லாம். இன்று புதிதாக அவன் பிடித்துக் கொண்டு அதட்டவே கடாரி பயந்து குடிசையை நோக்கிக் கத்திற்று. வள்ளியாத்தாள் கதவருகில் நின்று கொண்டிருந்தாள். அவள் கன்னத்திலே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தங்தையும் அதைக் கவனித்தான்.

“இத்தனை நாளாகப் பிரியமாக வளர்த்த கடாரியைப் பிரிவதென்றால் உனக்கு வேதனையாகத்தான் இருக்கும்; என்ன செய்யலாம்?” என்று கூறிக்கொண்டே வீரப்பன் போய்விட்டான்.

துடியலூர்ச் சந்தைக்குக் காட்டூரிலிருந்து ஒன்பது மைலிருக்கும். இரண்டு மைல் காட்டுப் பாதையில் சென்றுவிட்டால் பிறகு விசாலமான பாட்டை, அதில் போவது அத்தனை கடினமல்ல. இருந்தாலும் அந்தக் கடாரியைப் பிடித்துக்கொண்டு போவது பெருஞ் சங்கடமாக முடிந்து விட்டது வீரப்பனுக்கு.

வள்ளியாத்தாள் அன்று அடுப்பு மூட்டவே இல்லை; துக்கத்தோடு படுத்திருந்தாள். மாலையில் தகப்பன் பசியோடு வந்தால் என்ன செய்வதென்று கூட நினைக்கவில்லை. தனது வாழ்க்கையில் இருள் சூழ்வதைப்போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத உணர்ச்சி ஏற்பட்டது. தங்தையிடத்தில் நேற்றுவரை குழந்தையைப் போலத் தன் மனத்தில் தோன்றியதை யெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு இன்று வாயடைத்துவிட்டது. அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. தந்தை இரவிலே வீட்டிற்குத் திரும்பும் போது அவள் சோறு சமைக்காததையும், உணவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/22&oldid=1136820" இலிருந்து மீள்விக்கப்பட்டது