பக்கம்:உரிமைப் பெண்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உரிமைப் பெண்

 “எல்லோரும் மகாத்மா காந்தி, ஏசுகிறிஸ்து ஆகிவிட மாட்டார்கள். அவர்களைப் போன்ற பெரியோர்களைப் பற்றிப் பேசக்கூடாது. சாதாரணமான நம்மைப்போன்ற மனிதர்கள் அப்படி நினைப்பார்களா என்பதுதான் கேள்வி என்று நடாாஜ பிள்ளை உரத்துப் பேசினார்.”

“சாதாரண மனிதரிலும் அப்படி நினைப்பவர்கள் இருப்பார்கள். இருக்கவே முடியாது என்று நினைப்பது சரியல்ல” என்றேன் நான்.

“அப்படி ஒருவன் இருந்தால், அவனைப் பைத்திய மென்றுதான் நான் சொல்லுவேன்” என்று கூறினார் நடராஜ பிள்ளை.

“நல்ல தன்மையுடையவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களே உலகம் அறியாமல் இருக்கலாம். அதனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் பல விஷயங்களிலே தப்பான வழியில் சென்றாலும் ஏதாவது ஒன்றில் உயர்ந்து நிற்பார்கள். அதை அவர்கள் பெரிதாக மதிப்பார்கள்” என்றார் மற்றோர் அங்கத்தினர்.

இப்படியாகப் பலரும் அந்த விவாதத்திலே கலந்து கொண்டார்கள். அன்று உல்லாச சபையில் உல்லாசம் அதிகம் இல்லை. காரசாரமே மேலிட்டிருந்தது. நடராஜ பிள்ளை விடாப்பிடியாகத் தாம் சொன்னதையே வற்புறுத்திக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அதை ஆமோதிக்க வில்லை. ஆனால் அன்று யாருக்கும் பின்னால் நடக்கப் போகிற விஷயம் தெரியாது. தெரிந்திருக்குமானால் நடராஜ பிள்ளையே அத்தனை வேகமாக வாதாடியிருக்க மாட்டார்.

“நடராஜ பிள்ளை திருவல்லிக்கேணியிலே உள்ள பாங்கிலே தலைமைக் கணக்காாக இருந்தார். நம்பிக்கைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/47&oldid=1137244" இலிருந்து மீள்விக்கப்பட்டது