பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 உரைநடைக் கோவை கரும்பு நடுதற்காக அமைக்கப்பட்ட பாத்தி என்ற தனால், தலைவனுக்குகந்த விலைமாதர் தங்குதற் குரியது இவ்வில்லம் என்பதும், அப்பாத்தியில் தானே தோன்றி வண்டுகளின் பசியைப் போக்கும் ஆம்பல் என்றதனால், தலைவன் விரும்பாத நிலைமையில் தான் அவ்வில்லகத்தின்கண் இருந்து இயன்றவாறு இல்லறம் நடத்துபவள் என்பதும் இவ் வருணனையில் உள்ளுறையாகப் புலப்படுக்கப்பட்டுள்ளன. அகநானூறு என்னும் அழகிய சங்கநூலில் மருதத் திணை பற்றிய செய்யு ளொன்றில், பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன்,யாரையும் அறியே னென்றானாக, அவன் தீயவொழுக்கத்தைத் தலைவி பிறிதொரு நிகழ்ச்சியால் அவன் மனத்திற் பதிய அறிவறுத்திய செய்தி பின்வறுமாறு: 'ஐய! மழலை மொழியுடைய இளம் புதல்வனைத் தேர் வழங்கு. தெருவிற் கண்ட ஒருத்தி, அப் புதல்வன் நின் உரு வோடு ஒத்து விளங்குதலைக் கண்டு விரும்பி அங்கே அப்பொழுது யாரும் இல்லாமையால 'என் கண்ணே வருக!' என்று கூறிப் பெரிதும் மகிழ்ந்து தழுவி எடுத்துக்கொண்டாள். அந்நிலையில், யான் அங்கே சென்று, 'குற்றமற்ற சிறியவளே! ஏன் மயங்கு கின்றாய்? இவனுக்கு நீயும் தாயே ஆவாய்.' என்று கூறினேனாச, அது கேட்டு அவள், தாம் செய்தகளவு பலர் முன்னிலையில் வெளிப்பட உடன்பட்டு நின்றாரைப் போல நாணமுற்றுத் தலை கவிழ்ந்து நின்றாள். அந் நிலை யில் அவளும் நின் மகனுக்குத் தாயாவாளெனக். கொண்டு அவளை உபசரித்தேனன்றே' என்று தலை மகள் கூறியதாகும். இதன்கண் தலைவனது தீய