பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 உரைநடைக் கோவை களைத் தெளிவுபடுத்துங் குறிப்புக்கள் வியத்தகு முறை யில் அமைந்துள்ளன. கூறப்படும் பொருள்கள் வரை யறையும் தெளிவுமுடையனவாய்ப் பயில்வார்க்குப் பெரிதும் இன்பஞ் செய்கின்றன. இதற்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள் ளார். அது முருகப் பெருமானைப்பற்றிய வாழ்த்தாக இந்நூன்முகத்தே திலகம் போல ஒளிர்கின்றது. அப் பாடல் வருமாறு:-

"L தாமரை புரையுங் காமர் சேவடிப் பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றா லுலகே என்பதாம். இப் பாடலின் தூய்மையை நன்காராய்ந்த யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர் எல்லாக் குற் றமும் தீர்ந்த செய்யுட்கு மேற்கோளாக இதனை எடுத் துக் காட்டியுள்ளார். இதன் கண் முருகப் பெருமா. னுடைய திருவடி,நிறம், ஒளி, ஆடை, வேல், சேவற் கொடி என்னும் இவை ஆறும் புனைந் துரைக்கப்பட்டன. முருக வேளை நினைக்கும்போதே தாமரைமலர் முன்னிற் பதும், அறுவகை வருணனையில் உள்ளஞ் சேறலும் புலவர் பெருமக்களுக்கு இயல்பாக நிகழத் தக்கன. நிவந்தோங்கு இமயத்து நீலப் பைஞ்சுனையாகிய சரவணப் பூம்பொய்கையில், பதுமப் பாயலில், அப் பெருமான் தோன்றிய உண்மையை நினைவுறுவார் உளக்கண்ணுக்குத் தாமரைமலர் எங்ஙனம் புலனாகா திருத்தல் கூடும்?"நமக் குமாராய" என்னும் ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வியும், ஆங்கமை