பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை ..... 16 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி' என்னுந் திருக்குறளாலும்,

  • கன்னிமை கனிந்து முற்றிக் காமுறக் கமழுங் காமத்

தின்னறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே 119 என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளாலும் உணரலாம். காதலின் வளர்ச்சியை ஆடவர் மகளிர் பிரிவிற் காண்டல்போலக் கூடற் காலத்திற் காண்டற்கியலாது. கூட்டத்தில் இருவரும் உள்ளம் இயைந்து இன்பம் நுகர்வர். அந்நிலையில், அவ்வின்ப நிலை, "மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல்லெனிற் சொல்லுமா றெங்ஙனே என்ற பெரியார் மொழிப்படி வெளிப்படுத்துச் சொல் லுந் தரத்ததன்று. பிரிவுத் துன்பம் வாய்விட்டுக் கூறும் இயல்பினது. இதுபற்றியே இங்கே தோழி 'உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே" என்றனள். கூடலில் நிகழும் இன்பத்தினும் பிரிவின்கண் நிகழுந் துன்பம் மிகப் பெரிதா மென்பதனை, எரிதலைக் கொண்ட காமத் தின்பநீர்ப் புள்ளி யற்றால் பிரிவின்கட் பிறந்த துன்பம் பொருட்கடலனையதொன்றால்" என்னுஞ் சிந்தாமணியாசிரியர் கூற்றாலும் உணர லாம். துன்பத்தையும் நீராகக் கொண்டு, நீர்த்திவலை யள வினதென்றும், பிரிவுத் துன்பம் நீர்ப் பெருக்காகிய கடலளவினதென்றும் கூறியது உணர்ந்து இன்புறத் தக்கது. 'காமமோ பெரி' தென்றதும் பிரிந்த நிலை யில் நிகழ்வது கருதியே முதிர்ந்த பெரும்பழம் கொள்ளுவாரில்லையாயின், தனக்கு ஆதாரமாகிய சிறிய இங்கே இன்பத்தையுந் அவ்வின்பம்