பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் களில் தனித்த நிலையிற் காணப்படுதல்போற் கலப்பிற் காணப்படுதல் அரிது. ஒரு மொழியிற் செவ்வனம் பயின்று சுவை நிலைகண்டுணர்வார்க்கு அதன் தனி நிலையிற் போலப் பிறமொழிக் கலப்பில் அத்துணை இன்பம் உண்டாகாதென்பது உண்மை அநுபவமுடை யார் எல்லோர்க்கும் ஒத்ததாகும். இதனால் வடசொற் களை நேர்ந்தவாறு தமிழிற் புகுத்தல் முறையன்றென் பது தெளிவாம். ஒருசில வடசொற் கலப்பு உண்மை பற்றித் தமிழ் மொழியை வடமொழியினின்றும் தோன் றியதென்றல் பொருந்தாத தொன்றாம். திணைபாலுணர்த்தும் (ளி) என்னும் வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறு பாடு மிகப் பலவாம். வடமொழியில் தமிழிற் போலத் வினைவிகுதிகள் இல்லை. "பவதி" வினைமுற்று இருக்கின்றான் 4

    • 66

3 இருக்கின்றாள் 'இருக்கின்றது ' என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமி ழில் வினைமுற்றுக்களின் ஈறே திணைபால்களை உணர்த்தி நிற்கும். பால் வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப்பற்றி வருஞ் சொற்களெல்லாம் ஆண் பாலாகவும், பெண் மகளைப்பற்றி வருவனவெல்லாம். பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ் வரையறை யில்லை; மாறுபட்டு வரும் ; சொல் நோக்கியதாகலின். மனைவியைப் பற்றிய "பாரியை" (f) என்னுஞ் சொல் பெண்பாலாகவும்,"தாரம் (RI) என்னுஞ் சொல் ஆண்பாலாகவும், "களத் திரம்" (கண்). என்னுஞ் சொல் நபுஞ்சகப்பாலாகவும் வருதல் காண்க. வடமொழியில் ஒருமை இருமை • <5 "6