பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உரைஈடைக் கோவை இன்புறுத்தும் நிலையினவாகும். அவ் வின்பச் சுவை களை அழுந்தி ஆராய்ந்து துய்க்கும் புலவர்கள் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்றபடி மற்றையோர்க்கும் அளித்தல் வேண்டும். ஒரு மொழி யின் சிறப்பு மதிநுட்ப நூலோடுடைய புலவர் பெரு மக்களின் ஆராய்ச்சி யுரையால் வெளிப்படும். அத் துணை வேற்று நெறிகளால் ஆகாது. இந்நெறியில் இற்றைஞான்று தலைப்படுவார் சிலருளர் எனினும், அன்னாரை அந்நலங் கண்டு போற்றுவாரின்மையால் அவ்வருஞ்செயல் நன்கு விளக்கமுறவில்லை. நம் பண்டையோர் போலத் திருந்தியமுறையிற் செய்யுள் நூல்கள் பலவற்றை அவ்வாற்றலுடையார் வெளியிடல்வேண்டும். முன்னுள்ள செய்யுணூல்கள் பல இருப்பப் புதியன வேண்டுதல் மிகையெனக் கருது வாருமுளர். நம் பரதகண்டத்து மொழிகளெல்லாம் நிலைபிறழாது என்றுந் திருந்திய முறையிற் றிகழ்தல் மூல நூல்க ளெல்லாம் செய்யுட்களால் ஆக்கப்பட் டமையானேயாம். ஒரு செய்தியைப் புலமுடையார் உள்ளங் கொள்ளுங்கால் அது செய்யுண் முகமாகக் கேட்கப்படுதல்போல் வழக்குச் சொல் முகமாகக் கேட் கப்படுதல் இன்பம் பயவாது. நீண்டநாள் மறவாமல் உளங்கோடற்கும் இயலாது. ஒரு நிகழ்ச்சியைச் சிறந்த புலவன் கூறுதல்போற் பிறர் கூற அறியார். கூறப்படும் பொருள் சிறந்ததாக இருப்பினுங் கூறு வோன் புலவன் அல்லனேல் அது பிறர் நெஞ்சில் தங்கி இன்புறுத்த லாற்றாது. அரசுரிமையும் புலமை யும் வாய்ந்த சைவ மன்னர் ஒருவர் தம் உண்மைச் சமயக் கொள்கையையும் மறந்து வேற்றுச் சமய .