பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 உரைநடைக் கோலை முறையைத் தழுவி மற்றையோரும் தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உண்டி உடை முதலிய உதவிகளைச் செய்து தமிழ் கற்பிக்கத் தலைப்படுவராயின், இந்நாடு சில ஆண்டுகளிற் கல்விச் செல்வர்கள் பலரைப் பெற்றுத் திகழ்வதாகும். தமிழ் கற்க விரும்பும் நம் நாட்டு ஏழைச் சிறார்க்கு உணவு கொடுத்தாலன்றி அவர்கள் கல்வியில் தலைப் படார். பசிப்பிணி யென்னும் பாவியாற் பற்றப் பட்டார், கல்விச் சுவையை மிசைய எங்ஙனம் விரும்பு வர்? மாணாக்கருக்கு உணவு கொடுத்துக் கற்பிக்கும் கல்லூரி யமைத்தலாகிய நல்லறம் புரிவார், உலகத்து மக்கள் உடல்நலத்திற் குரியதும் உயிர்நலததிற் குரியது மாகிய இருவகைப் புண்ணியங்களையும் ஒருங்கு செய் தவராவர். ஓரிடத்தில் ஒரு நூறு சிறுவர்க்கு உணவு கொடுத்துக் கற்பிக்கும் தனித்தமிழ்க் கல்லூரி இது காறும நம் நாட்டில் அமைந்திலதே! இத்தகைய நிலையம் ஒன்றைக் கண்டு கண்ணுங் கருத்தும் குளிருங் காலம் என்று வாய்க்குமோ!வேண்டுவார் வேண்டு வன் அருளும் இறைவன், நும் செவ்விய உள்ளத்தில் நின்று இவ்வரும் பெருஞ் செயலில் நும்மை ஊக்கி அருளுவாராக. (4) சமயக் கல்வி நம் செந்தமிழ் மொழியைச் செவ்விதிற் பயிற்றுங் கல்லூரிகளி லெல்லாம் பிற சமயங்களோடு முரணாமல் நம் சமயக் கொள்கைகளை மாணாக்கர்களுக்கு எளிதிற் புலனாம் வண்ணங் கற்பித்தல் வேண்டும். தெய்வ .