பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை முறையின் அமைந்த பொருளிலக்கண ஒழுங்கும், முதிர்நலச் சொற்களும் சிதைவில் நுண் பொருள்களும் தங்கி நின்றொளிருஞ் சங்க நூற் றொகையும், புன்னு னிப் பனியில் மன்னுமா மலையுருத் துன்னிநின்றொளிர் தரல் போலச் சிற்றளவினவான சொற்றொடர்களிற் சிறந்தமைந்தனவாகிய பெரும் பொருள்கள் தோன்றித் திகழும் அறமுத னுதலிய திறமை நூல்களும், அன்பினைந்திணை அகவொழுக்க நேர்மையும், தொடர் நிலைச் செய்யுட் சுவைநலக் கனிவும், குறிக்கோள் பற்றிய அறிவியல் நூல்களின் திட்ப நுட்ப அமைவும், காதல் மிக்கு ஓதுவார் கேட்பாரது கல்லினும் வலிய உள்ள நிலையையுங் கரைத்து அவாதமை அன்புருவாக்கி இறை திருவருட்கு இனிதின் ஆளாக்கும் இசை நலந் தழீஇய அருட் பாசுரப் பகுதிகளும், இன்னும் பற்பல துறைகளைப் பற்றி நின்று திகழும் நூற்றொகைகளும் தன்பான் மிளிர, இனிமையாங் குணத்தை இயைந்து தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கமையப் பெற்று, எல்லாம் வல்ல இறைநிலை போல் என்றும் நின்று நிலவுவது நம் தென்றமிழ் மொழியேயாகும். இத்தகைய தனித்த நந்தமிழின் சால்பினைப் பற்றிப் பெரியோர் பற்பலரும் அவ்வப்போது பல கல்விக்கழகங்களிற் பேசியும் எழுதியும் வெளியிட்டுள்ளனர். ஆதலின், அதனையே யானும் ஈண்டு விரித்துக் கூற முற்படுதல் வேண்டாத தொன்றென அமைகின்றேன். 48 1. புலமையின் குறிக்கோள் இனிப் புலமையாவது யாதென ஆராய்தல். இன்றிமையாத தாகும். ஒரு நூலை ஆசிரியர் முகமாகக்