பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை அங்ஙனமே மீண்டும் மீண்டுங் கற்குந்தோறும் கற்குந் தோறும் உயரிய நூல்களின் நூண்பொருள் நலங்கள் நம் உள்ளத்தை ஈர்த்துத் தம்பாற்படுத்துப் பேரின் புறுத்துவனவாம். மிக விரைந்தோடும் வெள்ளப் பெருக்கினை யுடைய ஆற்றின் நீர்ச்செல வாற்றலை ஒருவன் அளக்க நினையின், அதன்கண் அவன் எதி ரேறிச் செல்ல வேண்டுவதே இன்றியமையாத தாகும். அவ்வாறின்றி அந்நீர்ச் செலவோடியைந்து அதனான் ஈர்த்துச் செல்லப்படுவானாயின், அவ் வாற்றலின் நிலை இற்றென உணரகில்லான். அங்ஙனமே உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப் பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருளொழுக்கில், நும் நுண் ணறிவு எதிரேறிச் செல்லல் வேண்டும். அங்ஙனஞ் சென்று அச் சொற் பொருள்களின் வன்மை வனப்புக் களை ஆராய்ந்தளக்க முயலின், அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற கண்டு வைத்த அரும் பொருண் மணி களின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன் புறலாம். ஆராய்ந்து தெளிவதற்குமுன் அச்சொற் பொருள்களோடு எதிர்த்து நிற்றலே நன்றாம். பொருணலத் தெளிவின் பின் அச் சொற்பொருள் களோடு நம் அறிவை இரண்டறக் கலப்பித்து, அவற் றின் வண்ணமாக நின்று, அசைவறும் நிலையெய்தி, இன்பவெள்ளத்துள் திளைத்தல் வேண்டும். ஒரு சிறந்த நூலாசிரியன் குறிக்கோள் இன்னதெனத் துணிந்தா லன்றி அவன் பலவாறு பன்னிப்பன்னி உரைக்கும் உரைப் பொருளின் உண்மைக் கருத்து அறியப்பட்ட தாகாது. சிறந்ததொரு முடிபொருளைச் செப்பனிட்டுத் திறம்பட உரைக்க முற்படும் புலவன், பருந்தின் 45