பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை மேம்பட்டதாக எண்ணிக் கடவுணிலை யுணர்ச்சியிற் றலைப்படாதிருத்தலே புலமை மாண்பெனக் கருதல், கடவுள் கலையுருவினள் என்பதை மறந்து கல்விக்கும் கடவுட் கொள்கைக்கும் இயைபின்றென எண்ணல், 'கற்ற கல்விக்குத் தக நிற்க' என்னும் பொருளுரை யைப் பொருட்படுத்தாமல் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பின்றெனக் கோடல்,இகலிலர் எஃகுடைய ராய்த் தம்மிற் குழீஇ இன்புறுதலை விடுத்துப் பல்பிறப் பினுந் தொடர்ந்த பகைஞர் எனக் கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்தல், தமக்கே பிறர் உதவி புரியற்பாலர் தாம் பிறர்க்கு ஒல்லும் வகையானும் உதவி புரிய முற்படல் தம் புலமை மாண்புக்கு ஏலாதென நினைத்தல், பிறர் கூறும் நலலன கொண்டு இன்புறு தற்கு உள்ளம் ஒருப்படாமையோடு அந் நல்லனவற் றையும் தீயனவாசத் திரித்துக் கூற முற்படுதல், உண்மை தெளிதற்கு நடுநின் றாராய்ந்து தங்கொள்கை மறுக்கப்படுமாயின், அதனைப் புலமைக்கு அழகென ஏலாது மறுத்தாரை முனிந்து வருத்தமுறுதல் முதலிய இன்னோரன்ன தீய குணஞ் செயல்களை அறவே ஒழித்தல் நன்று. 55 பண்டைப் பிறப்பின் தொடர்பால் ஒரோவழி அவை முற்படினுந் தன் மதிவலியால் இயன்றாங்கு விலக்க முயலல் வேண்டும். அவ்விலக்கு முயற்சி பயன்பட்டில் தெனினும் தம்பால் நிகழ்ந்த இவை தீயன என்றுணர்ந்த அவ் வளவிற் பயன் உண்டென்ப ஒரு சாரார். இத் தீய குணங்களில் ஒரோ வொன்றுடை யாரும் சிலபல உடையாருமாகப் பலரும், அறவே இலராகச் சிலரும் உலகத்துக் காணப்படுவர். ஏதேனும்