பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii குறுந் தொகை' என்னும் சொற்பொழிவுகளும், திருச்சி வானொலி நிலையத்திற் பேசிய 'நம் பண் டைய நீதி நூலாசிரியர், மாணிக்க வாசகர். சங்க காலத்து அங்கதம், காதற் கடிதங்கள், மணி மேகலை' என்னும் இவ்வைந்து கட்டுரைகளும் ஆக எட்டுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. புலவர் ஏறென விளங்கும் இந் தூலாசிரி யாது நுண்மாண் நுழை புலத்திறனை. இவர் இயற்றியுள்ள மண்ணியல் சிறுதேர் முதலிய மாணுறு நூல்களை ஓதியுணர்ந்த அறிவுடை யோர் நன்கு அறிவர். தமிழில் பேரறிவு கொளுத்தும் உரைநடை நூல்கள் பற்பல வெளி வரல்வேண்டும் என விரும்பும் அறிஞர்கள் இந் நூலினைக் கண்ணுறின் மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்வர்.புலவரும் புலன் கொளற்குரிய அருஞ் செய்திகள் இந் நூற்கண் பலவுள ஆத லின், இதனைப் படிக்கும் பேறுபெறும் மாண வர்கள் முத்தமிழ்ச் சுவை யறிந்து மூதறிஞராய்த் திகழ்வர் என்பது எமது துணிபு. இத்தகைய பேரறிவாளர் நீடுவாழ்ந்து தமிழ்ப் பெரும் பணி யாற்ற எல்லாம் வல்ல முழுமுதற் செம்பொருள் அருள் புரியவேண்டுமென அப் பரம்பொருளை மனமொழி மெய்களான் வணங்குகின்றோம். . இங்கனம் பழனியப்பா பிரதர்ஸ்